மாரடைப்பை ஏற்படுத்தும் LDL கொலஸ்ட்ராலை எரிக்கும்... சுவையான கார சட்னியை தயாரிக்கும் முறை

LDL Cholesterol: கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட ஸ்பெஷல் சட்னி ஒன்றை பற்றி தெரிந்து கொள்வோம். மேலும் அதை தயாரிக்கும் முறையையும் அறிந்து கொள்வோம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 13, 2025, 04:10 PM IST
  • கொலஸ்ட்ராலை எரிக்கும் கார சட்னியை தாயாரிக்கும் முறை.
  • உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகள்.
  • கார உணவுகள் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டவை.
மாரடைப்பை ஏற்படுத்தும் LDL கொலஸ்ட்ராலை எரிக்கும்... சுவையான கார சட்னியை தயாரிக்கும் முறை

LDL Cholesterol: மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. அதைக் கட்டுக்குள் வைத்திருக்க, மக்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் பல மாற்றங்களைச் செய்து கொள்வது பலன் அளிக்கும். மாரடைப்பு அபாயத்தை குறைக்க உணவில் கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் உணவுகளை சேர்க்கலாம். இதய நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை ( LDL Cholesterol) நீக்க இவை பெரிதும் உதவும்.

Add Zee News as a Preferred Source

பொதுவாகவே கார உணவுகள் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டவை. இந்நிலையில், கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட ஸ்பெஷல் சட்னி  ஒன்றை பற்றி தெரிந்து கொள்வோம். மேலும் அதை தயாரிக்கும் முறையையும் தெரிந்து கொள்வோம்...

கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகள்

உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகளை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.  இதயத்தில் அழுத்தத்தை உணரக் கூடும். அதே நேரத்தில், சுவாசத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதற்கான வேறு சில அறிகுறிகள் கீழே கொடுக்க

1. சோர்வு மற்றும் பலவீனம்

2. தலைவலி பிரச்சனை

3. உணர்வின்மை

4. கால்களில் வலி 

5. மார்பில் வலி

6. குமட்டல்

7. உயர் இரத்த அழுத்தம்

8. சுவாசிப்பதில் சிரமம்

9. வயிற்று பிரச்சினைகள்

கொலஸ்ட்ராலை எரிக்கும் கார சட்னியை தாயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

பூண்டு -  5 

சிவப்பு மிளகாய் 10 - 12

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு

உப்பு தேவைக்கு ஏற்ப

வெல்லம் - சிறிதளவு

செய்முறை

கார சட்னியை  தயாரிக்க முதலில் வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து பூண்டு, சிவப்பு மிளகாய்,  புளி ஆகியவற்றை வதக்கவும். ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பின் அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கவும். பின்னர் வாணலியில் மீண்டும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, கடுகு உளுத்தம் பருப்பு, கறிவிப்பிலை தாளித்து, அதில் அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.  

கார சட்னியை தொடர்ந்து உட்கொண்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை விரைவில் குணமாகும். ஏனெனில் இதில் உள்ள பூண்டு மற்றும் மிளகாய் இரண்டுமே கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் சேர்க்கப்படும் நல்லலெண்ணெய் இதயத்திற்கு இதமானது. நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து இதயத்திற்கு வலு சேர்க்கும். எனினும், இதில் உப்பை அளவோடு பயன்படுத்தவும். இந்துப்பு அல்லது சோடியம் குறைவாக உள்ள உப்பை பயன்படுத்தலாம். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க... தொப்பை கரைய... கடைபிடிக்க வேண்டிய 7 எளிய கட்டளைகள்

மேலும் படிக்க | மூளையை சூப்பர் கம்ப்யூட்டர் போல் வேலை செய்ய வைக்கும் வால்நட்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News