Weight Loss Tips: 3-3-3 விதி என்றால் என்ன? இதை எப்படி பின்பற்றுவது? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்த விவரங்கள் அனைத்தையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
)
3-3-3 Rule for Weight Loss: இந்த நவீன யுகத்தில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுமுறை, உடல் செயல்பாடின்மை ஆகியவற்றின் காரணமாக, பல வகையான நோய்கள் மக்களைச் சூழ்ந்துள்ளன. இவற்றில் உடல் பருமனும் அடங்கும்.
மக்கள் இந்நாட்களில் ஜங்க் ஃபுட், துரித உணவுகள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்கிறார்கள். இவை எளிதில் ஜீரணமாகாது. இவற்றை ஜீரணிக்க மக்கள் போதுமான அளவு உடற்பயிற்சி செய்வதில்லை என்பது மிகப்பெரிய பிரச்சனை. இதன் காரணமாக, அவர்களுக்கு கொழுப்பின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பலரிடன் தொப்பை கொழுப்பு பிரச்சனை அதிகமாக காணப்படுகின்றது.
முன்னர் பெரியவர்களை மட்டுமே அதிகமாக பாதித்த உடல் பருமன் பிரச்சனை இப்போது சிறிய குழந்தைகளை கூட விட்டுவைக்கவில்லை. தொப்பை கொழுப்பை குறைக்க பலர் டயட் உணவை பின்பற்றுகிறார்கள், சிலர் ஜிம் செல்கிறார்கள். எனினும் ஒரு எளிய வழியிலும் இதற்கான தீர்வை காணலாம்.
3-3-3 விதியை பின்பற்றி தொப்பை கொழுப்பை குறைத்து, உடல் எடையையும் குறைக்கலாம். 3-3-3 விதி என்றால் என்ன? இதை எப்படி பின்பற்றுவது? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்த விவரங்கள் அனைத்தையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்புக்கான 3-3-3 விதி என்ன?
3-3-3 விதி என்பது ஆரோக்கியமான முறையில் எடை இழப்புக்கான ஒரு வழியாகும். அதை நேர்மையாகப் பின்பற்றினால், உணவைத் தவிர்க்காமல் உங்கள் எடை தானாகவே கட்டுப்படுத்தப்படும்.
ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட வேண்டும்
முதலில், உணவைத் தவிர்ப்பது எடையைக் குறைக்காது. மாறாக திடீரென்று உணவைத் தவிர்ப்பது அல்லது அதிகமாகக் குறைப்பது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நன்கு புரிந்து கொள்ள வெண்டும். ஆகையால் அதை செய்வதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடத் தொடங்குங்கள். காலையில் லேசான காலை உணவு, மதியம் அதிக உணவு, இரவில் லேசான, எளிதாக செரிமானம் ஆகும் உணவை உண்ணுங்கள். இதற்கு ஒரு நேரத்தை நிர்ணயிக்கவும். இதைச் செய்வதன் மூலம், அகால பசி நின்றுவிடும். இதன் காரணமாக உங்கள் உடல் பருமன் தானாகவே கட்டுக்குள் வரத் தொடங்குகிறது.
பிற்பகல் 3 மணிக்கு முன் 3 பாட்டில் தண்ணீர் குடிக்கவும்
எடை இழப்புக்கான 3-3-3 ஃபார்முலாவின் இரண்டாவது விதி என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 மணிக்கு முன் 3 பாட்டில் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், நமது செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக்குகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், நம் உடலில் இருந்து நச்சுகள் அகற்றப்படுகின்றன. இது நம் உடலை உள்ளிருந்து சுத்தம் செய்கிறது. இது உடலில் தேவையற்ற கொழுப்பு சேர அனுமதிக்காமல் பார்த்துக்கொள்கிறது.
வாரத்திற்கு ஒரு முறை 3 மணிநேர உடற்பயிற்சி
உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். நீங்கள் ஒவ்வொரு நாளும் நடைபயிற்சி அல்லது ஜிம்மிற்கு செல்ல முடியாவிட்டால், வாரத்தில் குறைந்தது ஒரு நாளாவது உடல் பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும். அன்று குறைந்தது 3 மணிநேரம் லேசான உடற்பயிற்சி செய்வது நல்லது. இதைச் செய்வதன் மூலம், உங்கள் உடலின் அனைத்து தசைகளும் திறக்கும், தளர்ச்சிபெறும். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உடல் பருமன் பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ