)
Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற உணவு முறை, வாழ்க்கை முறை, குறைவான உடல் செயல்பாடு ஆகிய காரணங்களால் உடல் பருமன் பிரச்சனை பலரிடம் பரவலாக காணப்படுகின்றது. உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், அதை குறைப்பது மிக கடினமான ஒரு பணியாக உள்ளது.
உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் இவற்றால் அனைவருக்கும் தேவையான பலன்கள் கிடைப்பதில்லை. இவற்றின் மூலம் மட்டுமே எடையைக் குறைக்க முடியாது. உங்கள் வாழ்க்கை முறையில் சிறிதளவு மாற்றத்தைச் செய்து, ஒழுக்கத்தைக் கொண்டு வந்தால், அதன் நேர்மறையான பலன் 10 நாட்களில் தெரியத் தொடங்கும். தொப்பை கொழுப்பை குறைக்கவும், விரைவான எடை இழப்புக்கும் சில எளிய, இயற்கையான வழிகள் உதவும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்
காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடித்தால், எடை கட்டுப்பாட்டில் இருக்கும். அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால், மிக விரைவாக எடையை குறைக்கலாம். இது தவிர, சீரக நீர் அருந்துவதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்
பலர் எடையைக் குறைக்க காலை உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது சரியல்ல. அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவை உட்கொள்வது நல்லது. காலை உணவில் முட்டை, ஓட்ஸ், முளைகட்டிய உணவுகளைப் உட்கொள்வது நன்மை பயக்கும். காலை உணவில் தயிர் உட்கொள்வது கோடை காலத்தில் உதவியாக இருக்கும். அதே நேரத்தில், காலை உணவில் வறுத்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மதிய உணவு
உங்கள் மதிய உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். லேசான உணவை உண்ணுங்கள். ஆனால் ரொட்டி / சாதம், பருப்பு, பச்சை காய்கறிகள் மற்றும் சாலட் ஆகியவற்றை உணவில் கண்டிப்பாக சேர்க்கவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து விலகி இருப்பது நன்மை தரும்.
இரவு உணவில் என்ன உட்கொள்ள வேண்டும்?
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 8 மணிக்குள் இரவு உணவை சாப்பிட முயற்சி செய்வது நல்லது. இரவு உணவு லேசாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரவில் கிரில் செய்யப்பட்ட காய்கறிகள், கிச்சடி சாலட், சூப், கஞ்சி ஆகியவற்றை சாப்பிடலாம்.
அதிக தண்ணீர் குடிக்கவும்
இவை அனைத்தையும் தவிர, எடையைக் குறைக்க அதிக தண்ணீர் குடிப்பது முக்கியம். இது எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், உடலில் உள்ள நச்சுகளையும் விரைவாக நீக்கும். கிரீன் டீ மற்றும் இளநீர் குடிப்பதும் மிக நல்லது.
உடற்பயிற்சி செய்யவும்
நீங்கள் விரைவாக எடையைக் குறைக்க விரும்பினால், இந்த விஷயங்களைப் பின்பற்றுவதுடன் உடற்பயிற்சி செய்வது முக்கியம். இதற்கு நீங்கள் ஜிம் செல்லலாம் அல்லது லேசான ஜாகிங் மற்றும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால் ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஜம்பிங் ஜாக்ஸ் ஆகியவை எடையை விரைவாகக் குறைக்கின்றன.
நல்ல தூக்கம் அவசியம்
எடை இழக்க நல்ல தூக்கம் பெறுவதும் அவசியம். 7 முதல் 8 மணிநேரம் தொடர்ந்து தூங்குவது நல்லது. சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
என்ன சாப்பிடக்கூடாது
நீங்கள் விரைவாக எடை இழக்க விரும்பினால், சர்க்கரை, இனிப்புகள், பேக்கரி பொருட்கள், பீட்சா, பர்கர் மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது. அரிசி உட்கொள்வதைக் குறைக்கவும். அதற்கு பதிலாக, பசி எடுக்கும்போது பழங்கள், கொட்டைகள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளை சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ