)
Broccoli for Diabetes Control: இன்றைய அவசர உலகில் மனிதர்களை பல வித வாழ்க்கை முறை நோய்கள் ஆட்கொள்கின்றன. நம்மை அதிகமாக பாதிக்கும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முதலிடத்தில் உள்ளது என்றே கூறலாம். நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு நோயாக உள்ளது.
சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
இதய நோய்களுக்குப் பிறகு, நீரிழிவு நோய் தான் மக்களிடையே அதிகமாக பரவி வரும் ஒரு நோயாக உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். முன்னர் வயதானவர்களை மட்டுமே பாதித்து வந்த இந்த நோய் இப்போது சிறு குழந்தைகளையும் பாதிக்கின்றது.
குழந்தைகளில் டைப்-1 மற்றும் பெரியவர்களில் டைப்-2 அதிகமாக ஏற்படுவதாக கூறப்படுகின்றது. சர்க்கரை நோயை சில எளிய, இயற்கையான வழிகளிலும் கட்டுப்படுத்தலாம். இதில் சில காய்கறிகள் நமக்கு மிக உதவியாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் அப்படி ஒரு காய்தான் ப்ரோக்கோலி. சுகர் நோயாளளிகளுக்கு ப்ரோக்கோலி மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பும் நபர்கள் தங்கள் உணவில் ப்ரோக்கோலியைச் சேர்க்கலாம். இந்த ஒரு காய் அதிகரித்த சர்க்கரை அளவை பெரிய அளவில் குறைக்க உதவும்.
ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- ப்ரோக்கோலி ஒரு பிரபலமான காய்கறியாக மாறி வருகிறது.
- இந்த காயின் இலைகள் மற்றும் தண்டு என அனைத்தையும் சாப்பிடலாம்.
- இதில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
- ப்ரோக்கோலியில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை உடலில் ஒரு மருந்தாக செயல்பட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
நீரிழிவு நோயாளிகள் ப்ரோக்கோலியை ஏன் சாப்பிட வேண்டும்?
- ப்ரோக்கோலியின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு, சுமார் 10.
- இதை சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும்.
- ப்ரோக்கோலி சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை.
- பிற உணவுகளை சாப்பிடுவதால் சில சமயங்களில் திடீரென ஏறும் சுகர் அளவை கட்டுக்குள் வைக்கவும் இது உதவும்.
- வேறு சில காய்கறிகளுடன் கலந்து ப்ரோக்கோலியை சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்து மதிப்பை இன்னும் அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- ஆகையால், தினமும் ஏதாவது ஒரு வடிவத்தில் ப்ரோக்கோலியை உட்கொண்டால், சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
- இது ஆக்ஸிஜனேற்ற அழுத்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது.
ப்ரோக்கோலியின் பிற நன்மைகள்
- ப்ரோக்கோலியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- இதில் கரையாத நார்ச்சத்து உள்ளது, இது குளுக்கோஸ் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
- ப்ரோக்கோலி சாப்பிடுவது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் வழங்குகிறது, இது உடலில் வீக்கத்தைக் குறைக்கிறது.
- ப்ரோக்கோலியை தொடர்ந்து சாப்பிடுவது எடை இழப்புக்கும் உதவும்.
- இது நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- நல்ல பாக்டீரியாக்களின் மூலத்தையும் அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ