சர்க்கரை லெவலை சுலபமாய் குறைக்க உதவும் வெங்காய ஜூஸ்: இப்படி குடிச்சு பாருங்க

Onion Juice For Diabetes Control: சீரான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 11, 2025, 12:32 PM IST
  • நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும் வெங்காய சாறு.
  • இதை எப்படி செய்வது?
  • முழு செயல்முறையை இங்கே காணலாம்.
சர்க்கரை லெவலை சுலபமாய் குறைக்க உதவும் வெங்காய ஜூஸ்: இப்படி குடிச்சு பாருங்க

Onion Juice For Diabetes Control: உலக மக்களை அதிக அளவில் பாதிக்கும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. நீரிழிவு நோய் மிகவும் சிக்கலான ஒரு நோய். இதனால் ஒருவர் ஒருமுறை பாதிக்கப்பட்டால், பின்னர் பூரணமாக குணமடைய முடியாது. ஆனால், சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை கொண்டு இதை கட்டுக்குள் வைக்கலாம்.

Add Zee News as a Preferred Source

உலகம் முழுவதும் மருத்துவ அறிவியல் அதிக அளவில் வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும், விஞ்ஞானிகளால் அதற்கு உறுதியான சிகிச்சையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், சீரான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். உடல்நலம் குறித்து நீங்கள் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக நோய் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.

Diabetes Control Tips: நிபுணரின் ஆலோசனை

இந்தியாவின் பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைப்பதற்கான ஒரு எளிய வழியை பற்றி கூறியுள்ளார். ஒரு காயை வேகவைத்து அதன் தண்ணீரைக் குடிப்பதால். இரத்த சர்க்கரை அளவு குறைவதோடு மட்டுமல்லாமல், நம் உடலுக்கு இன்னும் பல நன்மைகளும் நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

Onion Juice: நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும் வெங்காய சாறு

நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், வெங்காயச் சாற்றைக் குடிக்கத் தொடங்கலாம். இதை உட்கொள்வதன் மூலம் டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய இரு வகை நோயாளிகளும் நிவாரணம் பெறலாம். வெங்காயத்தின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. இதன் காரணமாக இதன் செரிமானம் மெதுவாக நடக்கும். இதனால் சர்க்கரை இரத்த ஓட்டத்தில் மெதுவாகவும் வெளியிடப்படும்.

வெங்காயம் பல வழிகளில் உண்ணப்படுகிறது. இது பல உணவு வகைகளின் சுவையை கூட்ட பயன்படுத்தப்படுகின்றது. இந்த அற்புதமான காய்கறியை நாம் பச்சையாகவும் சாப்பிடலாம், இருப்பினும் இதை சாலட்டாக சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமான விருப்பமாக கருதப்படுகின்றது.

வெங்காயத்தை வேகவைத்து, அதன் சாற்றைப் பிரித்தெடுத்துக் குடித்தால், அது உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஒரு பானமாக வேலை செய்கிறது. உடலில் உள்ள கலோரிகளை குறைக்க இந்த வீட்டு வைத்தியம் மிக பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதனால் நீரிழிவு நோயாளிகளும் பல வித நன்மைகளைப் பெறுவார்கள்.

வெங்காய சாறு செய்ய, 2 மீடியம் அளவு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும். பின்னர் அதை ஒரு மிக்சி கிரைண்டரில் போட்டு, 1 கப் தண்ணீர், ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைக்கவும். இதைக் குடிப்பதன் மூலம், உடலுக்கு ஏராளமான நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க... தேவையான சில ஊட்டச்சத்துக்களும்... சில உணவுகளும்

மேலும் படிக்க | 13 கிலோவை டக்குனு குறைத்த பிரபலம் - எடையை குறைக்க பிக்பாஸ் நிகழ்ச்சி உதவியது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News