)
Home Remedies For Diabetes Control: உலகம் முழுதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோய் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. முன்னர் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்களை மட்டும் தன் பிடியில் சிக்கவைத்த நீரிழிவு நொய் இப்போது வயது வரம்பு இல்லாமல் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது.
இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட நோய். இந்த நோய் ஒரு முறை வந்துவிட்டால், இதை குணப்படுத்த முடியாது. எனினும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறையை பின்பற்றி இதை எளிதில் கட்டுக்குள் வைக்கலாம். அன்றாட உணவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். இதனுடன், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாகற்காய் சாறு / வேப்பம் சாறு
வேம்பு மற்றும் பாகற்காய் போன்ற கசப்பான பொருட்கள் உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படுகின்றன. இந்த இரண்டு சாறுகளிலும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலில் அதிகப்படியான குளுக்கோஸைக் குறைக்கின்றன. இவை முக்கியமாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. வேப்பம் சாறு அல்லது பாகற்காய் சாறு குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை இரண்டும் நீரிழிவு நோயாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பானங்கள். இயற்கையாகவே, இவற்றால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
மஞ்சள்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்களால் நிறைந்துள்ளன. மஞ்சளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. மஞ்சளை சமையலிலும் பானங்களிலும் சேர்க்கலாம். இது சளி, இருமல் மற்றும் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துகிறது. பச்சை மஞ்சளின் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் உட்புற ஆரோக்கியத்திற்கும், தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
நெல்லிக்காய் சாறு
சர்க்கரையை கட்டுப்படுத்த நெல்லிக்காய் மிகவும் உதவியாக இருக்கும். நெல்லிக்காயில் உள்ள குரோமியம் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது. குரோமியம் இதய வால்வுகள் மூடப்படுவதைத் தடுக்கிறது மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நமது அன்றாட உணவில் நெல்லிக்காயைச் சேர்ப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் கிளைசெமிக் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இவை நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. நெல்லிக்காய் சாற்றை தொடர்ந்து குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
வெந்தய நீர்
வெந்தயத்தை இரவில் ஊறவைத்து அதன் தண்ணீரைக் குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் செயல்முறையை மெதுவாக்குகின்றன. வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. தினமும் இரவில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து காலையில் இந்த நீரை குடிப்பது சுகர் நோயாளிகளுக்கு நல்லது.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய மசாலா ஆகும். இலவங்கப்பட்டை ஒரு மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், உடலின் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இது முக்கியமாக இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேநீர், காபி போன்ற பானங்களில் சேர்த்து இதை உட்கொள்வது நல்லது. உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ