Diabetes Control Tips: இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் மூன்று ஆரோக்கியமான சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Juices For Diabetes Control: இன்றைய அவசர உலகில் பல வாழ்க்கை முறை நோய்கள் மக்களை ஆட்கொள்கின்றன. உடல் பருமன், நீரழிவு நோய், யூரிக் அமிலம், இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் ஆகியவை இவற்றில் சிலர். இந்த பிரச்சினைகளில் நீரிழிவு நோய் முதன்மையானதாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் ஒருவருக்கு ஒருமுறை இந்த நோய் வந்து விட்டால் அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் மருந்துகள் கொண்டு இதை கேட்டுக்குள் வைக்கலாம்.
இந்த காலத்தில் உணவுப் பழக்கம் மாறி வருவதும், உடல் செயல்பாடற்ற நிலையும் நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் தங்கள் உணவு முறையில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். உணவில் நார்ச்சத்துகள் நிறைந்த மற்றும் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவற்றை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். பல எளிய, இயற்கையான வழிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றில் ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
குறிப்பாக, கோடை காலத்தில் நோயாளிகள் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு சர்க்கரை அளவு குறைவாக உள்ள சாறுகளை பருகுவது நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் மூன்று ஆரோக்கியமான சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Summer Juices For Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த 3 ஆரோக்கியமான சாறுகள்
Bitter Gourd: பாகற்காய் சாறு
பாகற்காய் அதன் கசப்பான சுவைக்கு பெயர் பெற்றது. ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு அருமருந்தாக உள்ளது. பாகற்காயில் சரன்டின் மற்றும் பாலிபெப்டைட்-பி போன்ற கூறுகள் உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
பாகற்காய் சாறு: நன்மைகள்
- இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.
- உடலில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது.
- வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
பாகற்காய் சாறு செய்வது எப்படி?
முதலில் ஒரு பாகற்காயை எடுத்து, அதன் நடுவில் வெட்டி, விதைகளை நீக்கவும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி பிளெண்டரில் அரைக்கவும். அதை வடிகட்டி, அதிலிருந்து சாறு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதன் சுவையை அதிகரிக்க எலுமிச்சை சாறு அல்லது சிறிது கல் உப்பு சேர்க்கலாம்.
Aloe Vera: கற்றாழை சாறு
கற்றாழை சருமத்திற்கு மட்டுமல்ல, நீரிழிவு நோய்க்கும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஆந்த்ராகுவினோன் மற்றும் லெக்டின் போன்ற சேர்மங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவியாக இருக்கும்.
கற்றாழை சாறு: நன்மைகள்
- இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
- கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
- செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
கற்றாழை சாறு செய்வது எப்படி?-
கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை பிரித்தெடுத்து கலக்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
Black Plum: நாவல் பழ சாறு
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு பருவகால பழம் நாவல் பழம். இதில் ஜாம்போலின் காணப்படுகிறது. இது ஸ்டார்ச்சை குளுக்கோஸாக மாற்றும் செயல்முறையை மெதுவாக்குகிறது.
நாவல் பழ சாறு: நன்மைகள்
- இரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்க அனுமதிக்காது.
- கணையத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
- இது ஆண்டிஅக்சிடெண்டுகள் நிறைந்தது.
நாவல் பழ சாறு செய்வது எப்படி?
முதலில் நாவல் பழங்களை கழுவி விதைகளை அகற்றவும். ஒரு பிளெண்டரில் அரைத்து வடிகட்டவும். அதில் சிறிது தண்ணீர் கலந்து குடிக்கவும்.
இந்த விஷயங்களை மனதில் கொள்வது நல்லது:
- எந்த சாறையும் அதிக அளவில் குடிக்க வேண்டாம்.
- உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே உங்கள் டயட்டில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- சர்க்கரை இல்லாத அல்லது குறைவான இனிப்பு வகைகளைத் தேர்வு செய்யவும்.
(இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ