சுகர் லெவல் சுலபமா குறைய காலையில் இந்த இலைகளை கடிச்சு சாப்பிடுங்க போதும்

Diabetes Control Tips: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் சில இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 7, 2025, 02:24 PM IST
  • சுகர் நோயாளிகளுக்கு உணவில் அதிகப்படியான கட்டுப்பாடு தேவை.
  • சில எளிய, இயற்கையான வழிகளிலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
  • அவற்றில் சில ஆயுர்வேத இலைகளும் அடங்கும்.
சுகர் லெவல் சுலபமா குறைய காலையில் இந்த இலைகளை கடிச்சு சாப்பிடுங்க போதும்

Leaves For Diabetes Control: இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு நோயால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நவீன உலகில் அதிகமாகியுள்ள மோசமான உணவு முறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் குறைவான உடல் செயல்பாடு ஆகியவை இதற்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. 

Add Zee News as a Preferred Source

மக்களை பாடாய் படுத்தும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முதன்மையாகனதாக உள்ளது. நீரிழிவு நோய் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது ஏற்படும் ஒரு பிரச்சனை ஆகும். இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், பல கடுமையான நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. ஆகையால் இதை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம். 

சுகர் நோயாளிகளுக்கு உணவில் அதிகப்படியான கட்டுப்பாடு தேவை. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பல மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். எனினும், இவற்றுடன் சில எளிய, இயற்கையான வழிகளிலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றில் சில ஆயுர்வேத இலைகளும் அடங்கும். இவற்றால் உடலுக்கு இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் சில இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை கடைகளில் இலவசமாகவோ, அல்லது மிக குறைந்த விலையிலோ கிடைக்கும் இலைகள். ஆனால் இவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

Curry Leaves: கறிவேப்பிலை

கறிவேப்பிலையை உட்கொள்வதால், உடலில் சர்க்கரை அளவை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு கொழுப்பையும் கட்டுப்படுத்துகிறது.

Neem Leeaves: வேப்பிலை 

வேப்பிலை ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகின்றது. அவற்றை உட்கொள்வது பல கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதன் கசப்பு, உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் இயற்கையான வழியில் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

Jamun Leaves: நாவல் பழ இலைகள்

நாவல் பழ இலைகளில் உள்ள ஜாம்போலின் மற்றும் ஜாம்பூசின் எனப்படும் தனிமங்களும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவுகின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை மென்று சாப்பிடுவதால் சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம். 

Tulsi Leaves: துளசி இலைகள்

துளசி இலைகளில் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

Bael Leaves: வில்வ இலைகள்

அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வில்வ இலையை உட்கொள்ளலாம். இது கணையத்தை செயல்படுத்தி இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும்.

இந்த விஷயங்களை மனதில் கொள்வது நல்லது

இந்த இலைகளை தினமும் உட்கொள்வது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், இவற்றை உட்கொள்ளத் தொடங்கும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், எந்த மருத்துவ ஆலோசனையும் இல்லாமல் சுகர் மருந்துகளை நிறுத்த வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கல்லீரலில் சேரும் நச்சுக்களையும் கொழுப்பையும் நீக்கும் சிறந்த... டீடாக்ஸ் உணவுகள்

மேலும் படிக்க | முருங்கை இலையை தினமும் சவைத்து சாப்பிட்டால்... இந்த 5 நன்மைகள் தேடி வரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News