)
Leaves for Diabetes Control: இன்றைய அவசர வாழ்க்கையில் பலவித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இவற்றில் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக சமீப காலங்களில் நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், உயர் யூரிக் அமிலம், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் மனிதர்களிடம் அதிகமாக காணப்படுகின்றன.
சமீப காலங்களில் நமக்கு சவாலாக மாறியுள்ள வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முதலிடத்தில் உள்ளது என்றே கூறலாம். உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு வேகமாக ஏற்ற இறக்கங்களை காணும். ஆகையால் சுகர் நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சில எளிய இயற்கையான வழிகளிலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். சில இலைகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Jamun Leaves: நாவல் பழ இலைகள்
நீரிழிவு நோயாளிகள் தினமும் மூன்று முதல் நான்கு நாவல் பழ இலைகளின் சாற்றைக் குடிக்கலாம், அல்லது இவற்றை மென்று சாப்பிடலாம். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
Tulsi Leaves: துளசி இலைகள்
தினமும் காலையில் 4–5 துளசி இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் துளசி இலைகளின் சாற்றை தண்ணீரில் கலந்து குடிப்பதாலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். துளசி இலைகள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.
Giloy Leaves: சீந்தில் இலைகள்
சீந்தில் எனப்படும் கிலோய் பல நோய்களுக்கு நிவாரணமாக அமைகின்றது. நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்த சீந்தில் இலைகளை உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Curry Leaves: கறிவேப்பிலை
கறிவேப்பிலை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இந்த இலைகள் உடலை குளிர்வித்து இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்
Neem Leaves: வேப்பிலை
வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தினமும் காலையில் 10-11 வேப்பிலைகளை உட்கொள்ளலாம், அல்லது, இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடிக்கலாம். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை விரைவாக குறைக்க முடியும்.
இவை அனைத்தும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனினும், சர்கரை நோயாளிகள் மருத்துவரை அணுகி, உங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து, மருத்துவரின் அறிவுரையின் படி மருந்துகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ