Fruits For Diabetes Control: இன்றைய நவீன உலகில் மாறிவரும் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக மக்களை அதிக அழுத்தத்திற்கு ஆளாக்கும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முதன்மையானதாக கருதப்படுகின்றது. ஒருமுறை ஒருவர் இதன் பிடியில் சிக்கிவிட்டால், அதன் பிறகு முழுமையாக அதிலிருந்து குணமடைய முடியாது. எனினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை பின்பற்றி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் பெரிய அளவில் நன்மை பயக்கின்றன. எனினும், இவற்றில் இயற்கையான சர்க்கரை இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் பழங்களை மிகவும் எச்சரிக்கையுடன் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், சில பழங்கள் நீரிழிவு நோயாளிகள் கெடுதல் செய்யாமல் நன்மை புரியும். குறிப்பாக, சில பருவகால பழங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் உதவியாக இருக்கின்றன.
கோடை காலத்தில் நீரிழப்பு காரணமாக, உடலில் இரத்த சர்க்கரை மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் கடுமையான விளைவுகளைத் தவிர்க்க, சில பழங்கள் நமக்கு உதவும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சுகர் நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 5 கோடைகால பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தர்பூசணி (Watermelon):
தர்பூசணி இனிப்புச் சுவை கொண்டிருந்தாலும், இது இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். தர்பூசணியில் குறைந்த கிளைசெமிக் குறியீடு (GI) உள்ளது. இதன் காரணமாக இது சர்க்கரை அளவை பாதிக்காது.
பப்பாளி (Papaya):
பப்பாளி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் மற்றொரு கோடைகால பழமாகும். இதில் ஆண்டிஆக்சிடெண்டுகள், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கின்றன. பப்பாளியை உட்கொள்வது உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
மாம்பழம் (Mango)
மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை விரைவாக உறிஞ்சபடுபதைத் தடுக்கிறது. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் இதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
லிச்சி (Litchi)
லிச்சி பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது. ஆனால் இதனுடன் இதில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன. இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. லிச்சி பழத்தை உட்கொள்வது உடலில் ஆற்றல் அளவைப் பராமரிக்கவும், இரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால் அதை குறைந்த அளவில்தான் உட்கொள்ள வேண்டும்.
ஆப்பிள் (Apple)
ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. அவை உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இது தவிர, ஆப்பிளின் கிளைசெமிக் குறியீடும் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வயிற்று கொழுப்பை வேகமாக குறைக்க 3 ஹெர்பல் டீக்கள்!
மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் செய்யும் மேஜிக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









