சர்க்கரை அளவை சுலபமாய் குறைக்கும் சைவ உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

Diabetes Control Tips: சைவ உணவு உண்பவர்களுக்கும் மெதுவாக ஜீரணமாகும், நீரிழிவு நோய்கு ஏற்ற பல உணவுகள் உள்ளன. அவற்றின் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அப்படிப்பட்ட உணவுகள பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 2, 2025, 10:51 AM IST
  • சுகர் நோயாளியா நீங்கள்?
  • சைவ உணவுகளின் மூலம் சுகர் லெவவலை கட்டுப்படுத்தலாம்.
  • முழு விவரம் இதோ.
சர்க்கரை அளவை சுலபமாய் குறைக்கும் சைவ உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

Vegetarian Foods for Blood Sugar Control: நீரிழிவு நோய் இன்று பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, ஆரோக்கியமான உணவுகளை, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது மிக அவசியமாகும். நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமற்ற, அதிக எண்ணெய், சர்க்கரை கொண்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் அத்தகைய உணவுகள் இரத்த சர்க்கரையை உடனடியாக அதிகரிக்கச் செய்கின்றன. 

Add Zee News as a Preferred Source

சுகர் நோயாளிகள் எப்போதும் மெதுவாக ஜீரணமாகும் உணவுகளைத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் சைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க என்ன சாப்பிடலாம் என்ற குழப்ப்பத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால், ஜீரணிக்க கடினமான உணவு வகைகள் பெரும்பாலானவை அசைவ உணவுகளில் கிடைக்கின்றன. இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. 

சைவ உணவு உண்பவர்களுக்கும் மெதுவாக ஜீரணமாகும், நீரிழிவு நோய்கு ஏற்ற பல உணவுகள் உள்ளன. அவற்றின் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அப்படிப்பட்ட உணவுகள பற்றி இந்த பதிவில் காணலாம்.

சியா விதைகள்

இந்த சிறிய விதைகள் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாகும். இதனுடன், இவை புரதத்தின் நல்ல மூலமாகவும் உள்ளன. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இவை அவசியம். இது குளுக்கோஸ் செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. அவை இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்துகின்றன, இது இரத்த சர்க்கரையின் அதிகரிப்பைத் தடுக்கிறது.

கொட்டைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு முந்திரி, பாதாம், வால்நட்ஸ் போன்றவை ஏற்றவையாக கருதப்படுகின்றன. அவற்றின் உதவியுடன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். இவை ஜீரணிக்க கடினமாக இருப்பதால் தேவையற்ற பசியை அடக்க உதவுகின்றன. இதனால் நீண்ட நேரத்திற்கு பசி கட்டுப்படுத்தப்படுகிறது. இவை மெதுவாக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன, ஆகையால் சர்க்கரையை விரைவாக அதிகரிக்காது.

பச்சை காய்கறிகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை இலை காய்கறிகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். அவற்றில் கலோரிகளில் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உதவலாம். இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க, பசலைக் கீரை, வெந்தயக்கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இது ஒரு சுவையான கிழங்கு வகை. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது உருளைக்கிழங்கைப் போலவே தோற்றமளித்து, கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்ததாக இருந்தாலும் கூட, அதன் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

பருப்பு மற்றும் பீன்ஸ்

இவை ஜீரணிக்க கடினமானவை. ஏனென்றால் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவை நார்ச்சத்து, கால்சியம், புரதம், பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சக்தி மையமாக உள்ளன. பருப்பு, பீன்ஸ் வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | இளைஞர்கள் கவனத்திற்கு... இதய நோய், மாரடைப்பை ஏற்படுத்தும் மிக ஆபத்தான 3 தீய பழக்கங்கள்

மேலும் படிக்க | சுகர் - பிபி இரண்டும் கட்டுக்குள் இருக்க... வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய சில சூப்பர் பானங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News