மனஅழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும் சில உணவுகள்... கொஞ்சம் விலகியே இருங்க

துரித கதியிலான வாழ்க்கை முறை நமக்கு அளித்த பரிசுகளில் ஒன்று மன அழுத்தம். இதனால் மூளை - உடல் ஆரோக்கியம் இரண்டும் பாதிக்கப்படுகின்றன. அதிலும், சில உணவுப் பொருட்கள் உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்கின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 31, 2025, 06:07 PM IST
  • மன அழுத்த ஹார்மோன்களை தூண்டும் சில ஆபத்தான உணவுகள்.
  • உடல் பருமன், நீரிழிவு முதல் பல கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம்.
  • ஆரோக்கியமாக வாழ, வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்
மனஅழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும் சில உணவுகள்... கொஞ்சம் விலகியே இருங்க

இன்றைய காலக்கட்டத்தில் துரித கதியிலான வாழ்க்கை முறை மோசமான உணவுப் பழக்கவழக்க பல கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன. இவற்றை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ, வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Add Zee News as a Preferred Source

துரித கதியிலான வாழ்க்கை முறை நமக்கு அளித்த பரிசுகளில் ஒன்று மன அழுத்தம். இதனால் மூளை - உடல் ஆரோக்கியம் இரண்டும் பாதிக்கப்படுகின்றன. சில உணவுப் பொருட்கள் உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்கின்றன. அதுமட்டுமின்றி, இதனை தொடர்ந்து உட்கொள்வதால், உடல் பருமன், நீரிழிவு முதல் பல கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை டயட்டில் இருந்து உடனடியாக அகற்றுவது முக்கியம். இந்நிலையில், நாம் உட்கொள்வதை நிறுத்த வேண்டிய அந்த உணவுப் பொருட்கள் (Health Tips) எவை என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்...

மன அழுத்த ஹார்மோன்களை தூண்டும்​ சில ஆபத்தான உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் (Refined Foods)

ரொட்டி, பாஸ்தா மற்றும் பேக்கரி உணவுகள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்அதிக உள்ள உணவுகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கின்றன. இதன் காரணமாக, உடலில் ஆற்றல் அளவு அதிகரித்து, பின்னர் அதே வேகத்தில் குறைகிறது. இந்த நிலையில் சோர்வு மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும். அவற்றை உட்கொள்வதால் மனநலம் பாதிக்கப்படும்.

ஆரோக்கியமற்ற கொழுப்புகள் (Unhealthy Fat)

பீட்சா, பர்கர், நொறுக்குத் தீனி போன்றவை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. இவற்றில் காணப்படும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடல் ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காமல் மனநலத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மூளையை சோர்வடைய செய்து, சரியாகச் செயல்பட அனுமதிக்காது. இதன் காரணமாக மனநிலை பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் (Processeed And Fast Food)

பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளில் டிரான்ஸ் அதிகப்படியான கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை உள்ளது. இது மனநிலையை பாதிக்கும். இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கும். மேலும், இந்த உணவுகள் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும்.

இனிப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் (Sweets)

இனிப்புகள், கேக்குகள் உள்ள அதிக சர்க்கரை உள்ள உட்கொள்வது மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. நாம் அளவிற்கு அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ, அது திடீரென்று உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனால், உடலுக்கு அதிக ஆற்றல் கிடைப்பது போல் இருக்கும் என்றாலும், மறுபுறம், உடலில் சர்க்கரை அளவு குறையும் போது, ​​அது எரிச்சல், சோர்வு மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

காஃபின் (Caffine Drinks)

டீ, காபி மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற காஃபினேட்டட் பானங்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் அதே நேரத்தில், அவை ஆற்றலை விரைவாகக் குறைக்கின்றன. இது சோர்வு மற்றும் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தலாம். இது மட்டுமின்றி, அவை நரம்புத் தளர்ச்சி, பதட்டம் மற்றும் பிற மனநலப் பிரச்சனைகளை அதிகரிக்கின்றன.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் முதல் டீடாக்ஸ் வரை...நன்மைகள் பயக்கும் நார்த்தங்காய்... கேட்டால் அசந்து போவீர்கள்

மேலும் படிக்க | தினசரி தயிர் எடுத்துக்கொள்ள வேண்டாம்! மருத்துவர்கள் சொல்லும் காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News