உயர் இரத்த அழுத்தம் என்பது மெல்லக் கொல்லும் விஷம் போன்றது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் உட்பட பல நோய்களை ஏற்பட காரணமாக இருக்கும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். ஹை பிபி என்பது உணவுமுறை உட்பட பல காரணிகளால் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினை. இதனால், உணவு முறை மூலம் அதனை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
சில உணவுப் பொருட்கள் இரத்த அழுத்தத்தை இயல்பான நிலையில் பராமரிக்க நன்மை பயக்கும். அதே வேளையில், ஆரோக்கியமற்ற சில உணவுகள் இரத்த அழுத்தத்தை எகிற வைக்கும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சில உணவுகளை தவிர்க்க (Health Tips) வேண்டும். பிபி நோயாளிகள் கண்டிப்பாக 5 பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்
1. உப்பு நிறைந்த சிற்றுண்டிகள்
உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரஞ்சு பிரைஸ் மற்றும் உப்பு சேர்த்த நட்ஸ் வகைகள் போன்ற உப்பு நிறைந்த சிற்றுண்டிகளில் சோடியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தம் விரைவாக அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதிகப்படியான சோடியம் உடலில் தண்ணீரை சேர்த்து, இது இரத்த அளவை அதிகரிக்கிறது. இரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிறிய அளவு சிப்ஸில் கூட 300 மில்லிகிராம்களுக்கும் அதிகமான சோடியம் இருக்கலாம். இது உங்கள் இரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரிக்கும்.
2. ரெடு டு ஈட் வகை சூப்
ரெடு டு ஈட் வகை சூப்கள் ஆரோக்கியமானதாகத் தோன்றலாம், ஆனால் சுவையை அதிகரிக்கவும், நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கவும் அதில் ரசாயனம் மற்றும் சோடியத்தை அதிகம் சேர்க்கின்றனர். ஒரு கப் சூப்பில் 800-1000 மி.கி சோடியம் இருக்கலாம். இது உடலின் திரவ சமநிலையை சீர்குலைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரிக்கிறது.
3. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
தொத்திறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் மற்றும் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த சேர்மங்கள் உட்கொண்ட உடனேயே நரம்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு தொத்திறைச்சியில் 700 மில்லிகிராமுக்கு மேல் சோடியம் இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் உனவியல் நிபுணர்கள். இது உயர் இரத்த அழுத்தத்தைத் தூண்டும்.
4. எனர்ஜி பானங்கள்
எனர்ஜி பானங்களில் காஃபின் மற்றும் டாரைன் போன்ற தூண்டுதல்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த நாளங்களை சுருக்கி இதயத் துடிப்பை அதிகரிக்கும். சில நேரங்களில் இரத்த அழுத்தம் சில நிமிடங்களில் அதிகமாகிவிடும். ஒரு எனர்ஜி பானத்தில் 200 மில்லிகிராம் வரை காஃபின் இருக்கலாம். இது ஒரு கப் காபியை விட அதிகம்.
5. சீஸ்
சீஸ், குறிப்பாக செடார் அல்லது பர்மேசன் போன்ற அதிக நாட்கள் ஷெலப் லைஃப் கொண்ட வகைகளில், சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. இவை தமனிகளை கடினப்படுத்தி இரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரிக்கும். ஒரு சிறிய அளவான 50 கிராம் சீஸ்ஸில் 500 மில்லிகிராம் சோடியம் இருக்கலாம். இது ஆபத்தானது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ஆபத்து: இவற்றை டயட்டில் உடனே சேருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









