உலகளவில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது, அடுத்த 25 ஆண்டுகளில் அதிக எடை உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2050 ஆம் ஆண்டளவில் உலகின் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் மூன்றில் ஒரு பகுதியினர் உடல் பருமன் அல்லது அதிக எடையால் பாதிக்கப்படுவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் பிரச்சனை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முர்டோக் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது மற்றும் அதன் முடிவுகள் கவலையளிக்கின்றன. உடல் பருமன் பிரச்சனை ஆரோக்கிய பாதிப்பு மட்டுமல்லாத, குழந்தைகள் ஒரு நாட்டின் வருங்கால தூண்கள் என்பதால் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என கவலை வெளியிட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் இந்த பிரச்சனையை எளிதாக எடுத்துக் கொள்ள இயலாது.
குழந்தைகள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள்
மாரடைப்பு என்பது நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்த காலம் போய் தற்போது சிறு குழந்தைகள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நேரிடுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு நமது உணவு முறையும் வாழ்க்கை முறையும் (Health Tips) முக்கிய காரணமாகிறது என்பதையும் மறுக்க இயலாது.
எதிர்காலத்தில் உடல் பருமனின் தாக்கம்
சர்வதேச ஆய்வின் முதன்மை ஆசிரியரான டாக்டர் ஜெசிகா கெர் உடல் பருமன் பிரச்சனை குறித்து கூறுகையில், "இந்த வளர்ந்து வரும் பிரச்சனை சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் மீது பில்லியன் டாலர் சுமையை சுமத்தும். கூடுதலாக, நீரிழிவு, புற்றுநோய், இதய பிரச்சனைகள், சுவாசிப்பதில் சிரமம், பாலியல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மனநல பிரச்சனைகள் போன்ற உயர் உடல் நிறை குறியீட்டுடன் (பிஎம்ஐ) தொடர்புடைய பிரச்சினைகள் இன்றும் எதிர்காலத்திலும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பாதிக்கும்.
உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
1990ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, 5 முதல் 24 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று இந்த ஆராய்ச்சி காட்டுகிறது. 2021 ஆம் ஆண்டில், உலகளவில் 493 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருந்தனர்.
வயதான காலத்தில் உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
பருமனான குழந்தைகளுக்கு பக்கவாதம், பல வகையான புற்றுநோய், இதய நோய்கள், வகை 2 நீரிழிவு நோய், அகால மரணம் மற்றும் பிற்கால வாழ்க்கையில் மனநோய் போன்ற ஆபத்துகள் அதிகம். உடல் பருமன் பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நம் குழந்தைகளின் வாழ்க்கை சவாலானதக விடும் என்று டாக்டர் கெர் கூறினார். 2030ஆம் ஆண்டுக்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க... தொப்பை கரைய... கடைபிடிக்க வேண்டிய 7 எளிய கட்டளைகள்
மேலும் படிக்க | மூளையை சூப்பர் கம்ப்யூட்டர் போல் வேலை செய்ய வைக்கும் வால்நட்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









