)
புற்றுநோய்க்கான காரணங்கள்: இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் புற்றுநோயால் இறக்கின்றனர். புற்றுநோய் ஒரு கொடிய மற்றும் தீவிரமான நோயாகும். அதற்கான முக்கிய காரணம் நமது அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த செய்தியில், புற்றுநோய் போன்ற கடுமையான நோயை ஏற்படுத்தும் ஆபத்தான பழக்கவழக்கங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். இதனை கருத்தில் கொண்டு ஆரோக்கியமான பழக்கம் வழக்கம், உணவு பழக்கம் ஆகியவற்றை கடைபிடிப்பது மிகவும் முக்கியம்.
புற்றுநோய்க்கான காரணங்கள்
மூத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயேஷ் சர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களைப் பற்றி அவர் கூறினார்.
மோசமான உணவுப் பழக்கங்கள்
இப்போதெல்லாம் நாம் பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக சர்க்கரை கொண்ட ரெடி டு ஈட் மற்றும் குறைவான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறோம், இதுபோன்ற சூழ்நிலையில் அது உங்கள் உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயை பெருமளவில் தவிர்க்கலாம்.
உடல் பருமன்
இன்றைய காலகட்டத்தில், உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். இது பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் புற்றுநோயை ஏற்படுத்தும்.
புகையிலை
சிகரெட், குட்கா அல்லது பீடா என எந்த வடிவில் புகையிலை எடுத்துக் கோள்வது மிக ஆபத்து. இது புற்றுநோய் பாதிப்பிற்கான மிகப்பெரிய காரணம். இது நுரையீரல், வாய் மற்றும் தொண்டை புற்றுநோயை ஏற்படுத்தும். நீங்கள் புகையிலையை எந்த விதத்தில் உட்கொண்டால், அதை விரைவில் விட்டுவிடுங்கள்.
HPV
மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம், இதன் காரணமாக பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இருப்பினும், இளம் பெண்களுக்கு HPV தொற்றைத் தடுக்க தடுப்பூசி உள்ளது.
மது பானங்கள்
மது பழக்கம் உடல் நலத்தீற்கு பெரும் கேடு என்பது அனைவரும் அறிந்ததே. இது உங்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உண்டாவதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம். இது கல்லீரலை மிகவும் சேதப்படுத்துகிறது. கல்லீரல் மட்டுமல்ல, தொண்டை, வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் பெரிதும் அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ