இதயம் முதல் கிட்னி வரை... அளவிற்கு அதிக விட்டமின் டி உடலுக்கு விஷம் போன்றது

Vitamin D Toxicity: வைட்டமின் டி மிக முக்கியமாக சூரிய ஒளி மூலம் பெறப்படுவதால் 'சூரிய ஒளி வைட்டமின்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அதிகப்படியான உட்கொள்ளல் ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி (Hypervitaminosis D) எனப்படும் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 3, 2025, 03:31 PM IST
  • வைட்டமின் டி அதிகரிப்பதால், நரம்புகள் மற்றும் இதய திசுக்களில் அதிக அளவு கால்சியம் சேரத் தொடங்குகிறது.
  • அதிகப்படியான வைட்டமின் டி ஹைபர்கால்சீமியாவை ஏற்படுத்துகிறது.
  • வைட்டமின் டி அளவிற்கு அதிகமானால், சில புற்றுநோய்களின் அபாயத்தைக் அதிகரிக்கலாம்
இதயம் முதல் கிட்னி வரை... அளவிற்கு அதிக விட்டமின் டி உடலுக்கு விஷம் போன்றது

Vitamin D Toxicity: வைட்டமின் டி ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசிய ஊட்டச்சத்து. கால்சியம் சத்தை உடல் பெற முக்கிய காரணமாக உள்ள வைட்டமின் டி எலும்பு வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவை சிறப்பாக இருக்க அவசியம். எனினும், இந்த ஊட்டச்சத்து அளவிற்கு அதிகமானால், ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.

Add Zee News as a Preferred Source

வைட்டமின் டி மிக முக்கியமாக சூரிய ஒளி மூலம் பெறப்படுவதால் 'சூரிய ஒளி வைட்டமின்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அதிகப்படியான உட்கொள்ளல் ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி (Hypervitaminosis D) எனப்படும் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். இந்த நிலை நமது ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது. அதிகப்படியான வைட்டமின் டி உங்கள் உடலில் சேர்ந்தால் அது எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

விட்டமின் டி ஊட்டச்சத்தினை சூரிய ஒளி மற்றும் உணவின் மூலம் பெறுவது இயற்கையான முறை. ஆனால், (Vitamin D) குறைபாட்டை போக்க மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கு உள்ளது. தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வைட்டமின் டி இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீண்ட காலம் வைட்டமின் டி மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் அளவிற்கு அதிகப்படியான வைட்டமின் டி சேர்ந்தால் என்ன நடக்கும்?

1. இதயப் பிரச்சினைகள் 

வைட்டமின் டி அதிகரிப்பதால், நரம்புகள் மற்றும் இதய திசுக்களில் அதிக அளவு கால்சியம் சேரத் தொடங்குகிறது. இது இதய துடிப்பு சீரற்ற நிலை உண்டாகிறது. இதய தமனிகள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுவதால், இதய வோய் அபாயத்தை அதிகரிக்கிறது.வைட்டமின் டி நச்சுத்தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், குறிப்பாக ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதைக் காட்டுகின்றன. 

2. சிறுநீரக பாதிப்பு

அதிக அளவு கால்சியம் சிறுநீரக கற்கள் அல்லது நாள்பட்ட சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரகங்களில் கால்சியம் படிவுகள் அவற்றின் செயல்பாட்டை பாதிக்கின்றன. இது வலி அல்லது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். நீண்டகால நச்சுத்தன்மை காரணமாக நிரந்தர சேதத்தைத் தடுக்க மருத்துவ தலையீடு தேவைப்படலாம்.

3. ஹைபர்கால்சீமியா

அதிகப்படியான வைட்டமின் டி ஹைபர்கால்சீமியாவை ஏற்படுத்துகிறது. இதில் இரத்தத்தில் கால்சியம் அளவு ஆபத்தான முறையில் அதிகரிக்கிறது. இது குடல் ஆரோக்கியத்தை பெரிடும் பாதிக்கும். இதன் அறிகுறிகளில் குமட்டல், வாந்தி, சோர்வு மற்றும் குழப்பம் ஆகியவை அடங்கும்.

4. செரிமான மற்றும் நரம்பியல் பிரச்சினைகள்

வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். நரம்பியல் ரீதியாக, அதிக கால்சியம் அளவுகள் மன ஆரோக்கியத்தை பாதித்து எரிச்சல், குழப்பம் ஆகியவற்றை ஏற்படுத்தும். கடுமையான சந்தர்ப்பங்களில், நரம்புகள் உடலில் பிற பாகங்களுக்கு வழங்கும் சமிக்ஞையைத் பாதிப்பதால், வலிப்பு போன்ற த்தாக்கங்களை ஏற்படுத்தும். 

5. புற்றுநோய் ஆபத்து

வைட்டமின் டி அளவிற்கு அதிகமானால், சில புற்றுநோய்களின் அபாயத்தைக் அதிகரிக்கலாம் என ஆய்வுகள் பல கூறுகின்றன. அதிகப்படியான வைட்டமின் டி அளவுகள் கணையம் அல்லது புரோஸ்டேட் போன்ற புற்றுநோய்களில் கட்டி வளர்ச்சியை தூண்டலாம். 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, அதிக அளவு வைட்டமின் டி செல்லுலார் அமைப்பை பாதிப்பதால், இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறியுள்ளது. இருப்பினும் கூடுதல் ஆராய்ச்சி தேவை எனவும் கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | புகைப்பழக்கத்தை விட மிக ஆபத்தான பழக்கம்! உயிரையும் எடுக்கும்..எது தெரியுமா?

மேலும் படிக்க | சுகரை கட்டுப்படுத்தும் ஈசியான உடற்பயிற்சிகள்! தினமும் 15 நிமிடம் பண்ணுங்க போதும்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News