)
வேர்க்கடலை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதனால் தான், அதனை ஏழைகளின் பாதம் பருப்பு என்ற அழைப்பார்கள். வேர்க்கடலையில், புரதம், விட்டமின் பி, விட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து மட்டுமின்றி மெக்னீசியம் பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற கனிம சத்துக்களும் நிறைந்துள்ளன.
இருப்பினும், வேர்கடலை எல்லோருக்கும் நல்லது என கூற இயலாது. குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பிட்ட சில உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலையை தவிர்க்க வேண்டும் அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்.
உடல் பருமன் உள்ளவர்கள்
வேர்க்கடலை புரதம் நிறைந்தது என்றாலும், அளவிற்கு அதிகமாக இதனை எடுத்துக் கொள்வதால், உடல் எடை அதிகரிக்கும். ஏனெனில் இதில் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உள்ளது. இது உங்கள் எடை குறைப்பு முயற்சியை பாதிக்கும். எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், குறைந்த அளவில் வேர்க்கடலையை உட்கொள்வது நல்லது.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள்
ஆஸ்துமா மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலையை அளவோடு உண்ண வேண்டும். ஏனெனில் இது உடலில் அழற்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
வேர்க்கடலையில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் சிறுநீரக நோயாளிகளுக்கு இது ஏற்றதல்ல. சிறுநீரக ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சிறுநீரக நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.
கர்ப்பிணிகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாகவே உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக வேர்க்கடலை சாப்பிடுவதால் வீக்கம், வயிற்று வலி, குமட்டல், வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். கருவில் உள்ள குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன..
வேர்கடலை அலர்ஜி உள்ளவர்கள்
வேர்கடலை எல்லோருக்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. வேர்க்கடலை ஒவ்வாமை சிலருக்கு இருக்கலாம். வேர்க்கடலை ஒவ்வாமை இருந்தால், உடலில் அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ