மாரடைப்பு என்பது முதியவர்களை தாக்கிய நிலை மாறி, இப்போது எந்த நேரத்திலும், யாருக்கும், எங்கும் ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது தான். அதிலும், புதிய வகை மாரடைப்பு சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது. இது மாரடைப்பின் மிகவும் ஆபத்தான வடிவமாகும். மகாராஷ்டிராவில், கல்லூரி பிரியாவிடை விழாவில், உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்ல, இதற்கு முன்னரும், இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன.
பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையில் விழுந்த வர்ஷா
மகாராஷ்டிராவின் தாராஷிவ் நகரில் கல்லூரி பிரியாவிடை விழாவில், வர்ஷா என்ற மாணவி மேடையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வர்ஷாவின் பேச்சை ரசித்து கொண்டிருந்த பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பொலி கேட்டிகொண்டிருந்தது. அதே சமயத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையில் விழுந்த வர்ஷா எழுந்திருக்கவில்லை. அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த விட்டத்தை அறிந்த உடன் அங்கே சூழ்நிலையே மாறி விட்டது.
சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் காணொளி
மாணவி மேடையில் இறந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வர்ஷாவுக்கு ஏற்பட்டது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்கின்றனர் மருத்துவர்கள். சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் என்ன, அது ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
சைலண்ட் ஹார்ட் அட்டாக் குறித்து நிபுணர்கள் கூறும் கருத்து
டெல்லியின் இதய அறுவை சிகிச்சை நிபுணரும் குழந்தை மருத்துவருமான டாக்டர் மகேஷ் வாதவன், சைலண்ட் ஹார்ட் அட்டாக் மிகவும் ஆபத்தானது. இதில் நோயாளிக்கு எந்த வித எச்சரிக்கையும் இல்லாமல் ஒரு தாக்குதல் ஏற்படுகிறது. மருத்துவ ரீதியாக, நீரிழிவு, கொலஸ்ட்ரால் அல்லது இரத்த அழுத்தம் போன்ற எந்த அறிகுறிகளோ, பிரச்சனையோ அல்லது நோயோ இல்லாவிட்டால், அது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று கருதப்படுகிறது. ஆனால் நீரிழிவு நோய், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காரணிகளைக் கொண்டவர்களை இது அதிகம் பாதிக்கிறது.
இளைஞர்களிடையே சைலண்ட் ஹார்ட் அட்டாக் பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள்
மன அழுத்தம்
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே மன அழுத்தத்திற்கு மிகப்பெரிய காரணம் போட்டி சூழல்தான். இதனால், மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கான போட்டி, குடும்பத்தினரிடம் உள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பதட்டம், இவை அனைத்தும் மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உடல் உழைப்பு இல்லாத நிலை
குழந்தைகள் அல்லது இளைஞர்களிடையே உடல் ரீதியான அழுத்தம் அதிகரிப்பதற்கு உடல் உழைப்பு இல்லாத நிலையும், அதிகப்படியான உடல் எடையும் ஒரு காரணமாகும். உடல் செயல்பாடு இல்லாதது மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும், இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் அல்லது படிப்பதும் சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட முக்கிய காரணங்களாகும்.
வாழ்க்கை முறை
இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை முறை ஆரோக்கியத்தை சீர்குலைப்பதாக உள்ளது. சரியான நேரத்தில் தூங்குவதில்லை, சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை, எந்த வேலையும் அதற்கான நேரத்தில் செய்வதில்லை. வாழ்க்கை முறையில் உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் துரித உணவு, பதப்படுத்தப்ப உணவு போன்ற ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உணவில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்கள் அனைத்தும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன.
மருத்துவ நிலை
உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் அல்லது ஏதேனும் நோய்க்கு மருந்து உட்கொள்வதாலும் இத்தகைய சைலண்ட் ஹார்ட் அட்டாக் தாக்குதல்கள் ஏற்படலாம்.
மரபணு காரணம்
குடும்ப வரலாறு என்பது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், எதிர்கால சந்ததியினருக்கும் இருதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர் நிபுணட்கள்.
மாரடைப்பின் அறிகுறிகள்
1. அஜீரணம்
2. காய்ச்சல் போன்ற அறிகுறிகள்
3. மார்பு அல்லது மேல் முதுகில் தசை இறுக்கப்படுவது போன்ற உணர்வு
4. தாடை, மேல் முதுகு அல்லது கைகளில் அசௌகரியம்
மாரடைப்பு வராமல் தடுக்க செய்ய வேண்டியவை
1. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
2. உங்கள் வழக்கத்தில் வழக்கமான உடற்பயிற்சியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. மன அழுத்தத்தைக் குறைக்கவும்.
4. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்துங்கள்.
5. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ஆபத்து: இவற்றை டயட்டில் உடனே சேருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









