Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றி இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.

Diabetes Control Tips: தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது. முன்னர் இந்த நோயால் வயதானவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இன்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றி இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம். ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான விஷயங்களைப் பற்றி அலட்சியமாக இருக்கக்கூடாது. அலட்சியம் காட்டப்பட்டால் இந்த நோய் ஆபத்தாகலாம்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சில எளிய, இயற்கையான வழிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பச்சை காய்கறிகள்
கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் பச்சை காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். வெள்ளரிக்காய், குடைமிளகாய் மற்றும் இலை கீரைகள் போன்றவற்றை சுகர் நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடலின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கவும் உதவும்.
நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள்
கீரை, கேல் போன்றவற்றில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவற்றை சாப்பிடுவதன் மூலம், நீரிழிவு நோயாளிகளின் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கின்றது. அதேபோல், குடைமிளகாய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான வைட்டமின் சி கிடைக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
கற்றாழை சாறு
சருமத்திற்குப் பயன்படுத்தப்படும் கற்றாழை நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்றாழ்ழையில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளதாக ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நமது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது. கற்றாழையில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் சாறு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது நமது செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
மஞ்சள்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மஞ்சள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. மஞ்சளில் உள்ள பண்புகள் சளி, இருமல் மற்றும் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் உணவுகளில் மஞ்சளை பயன்படுத்தலாம். இது உடலின் உட்புற ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காயில் உள்ள குரோமியம் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது. குரோமியம் இதய வால்வுகள் மூடப்படுவதைத் தடுக்கிறது மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. தினமும் காலையில் நெல்லிக்காய் சாறு குடிப்பது சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உதவும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ