)
ஒற்றை தலைவலி என்பது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைவதால், ஏற்படும் கடுமையான வலி. நரம்பியல் சார்ந்த பிரச்சினை ஆன ஒற்றை தலைவலி ஏற்படும்போது மூளையின் சில பகுதிகள் அதி வேகமாக செயல்பட்டு வலியை ஏற்படுத்துகின்றன. மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி சில மணி நேரம் முதல் இரண்டு நாட்கள் வரை கூட நீடிக்கலாம்.
ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்
தூக்கமின்மை மன அழுத்தம், கோடை காலத்தின் கடுமையான வெப்பநிலை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளது. கடுமையான தலைவலி ஏற்படும் போது, பின்புறம் மண்டை, கழுத்து ஆகியவற்றில் வலி பரவுவதை உணரலாம். கடும் தலைவலி காரணமாக, வாந்தி குமட்டல் உணர்வு அதிகம் இருக்கும். எதையும் சாப்பிட முடியாத நிலை இருக்கும். சத்தம் மற்றும் பிரகாசமான ஒளியை தாங்கிக் கொள்ள முடியாத நிலை இருக்கும்.
ஒற்றை தலைவலியை தீர்க்கும் சில வீட்டு வைத்தியங்கள்
1. பிரம்மி மற்றும் அஸ்வகந்தா போன்ற மூலிகைகள், நரம்புகளை தளர்த்தி, மன அழுத்தத்தை குறைத்து, வலியிலிருந்து நிவாரணம் அழைக்கிறது.
2. இஞ்சி மற்றும் துளசி நீரும் ஒற்றை தலைவலியை போக்கும் அருமருந்து. வெதுவெதுப்பான இஞ்சி நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது, தலைவலியை மட்டுமல்லாது, அதன் காரணமாக ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலை போக்கும் அருமருந்தாக (Health Tips) இருக்கும்.
3. உலர் திராட்சை ஒற்றைத் தலைவலையில் நிவாரணம் அளிக்கும். இரவில் 10 உலர் திராட்சை ஊற வைத்து காலையில் சாப்பிடுவதால், ஒற்றைத் தலைவலி ஏற்படாமல் தடுக்கலாம்
4. சுத்தமான பசு நெய் ஒற்றைத் தலைவலியை வராமல் தடுக்க உதவும் அருமருந்து. ஒரு சொட்டு பசு நெய்யை பசும் பாலில் கலந்து குடிப்பது ஒற்றைத் தலைவலியை போக்கும் மருந்து.
ஒற்றைத் தலைவலி ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டியவை
1. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது ஒற்றை தலைவலி ஏற்படாமல் தடுக்க உதவும். அதோடு சுவாச பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வதும் பலன் தரும்.
2. தூக்கமின்மை ஒற்றை தலைவலி காண முக்கிய காரணமாக உள்ள நிலையில், தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் ஒன்றை தலைவலியை தடுக்க பெரிதும் உதவும்.
3. தினமும் பிரஷ்ஷான பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பச்சைகாாரிகள்களை சேர்த்துக் கொள்வதாலும், ஒமேகாதிரி கொழுப்பு அமிலம் நிறைந்த நட்ஸ் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் ஒற்றை தலைவலி ஏற்படாமல் தடுக்கலாம்.
4. துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி ஒற்றைத் தலைவலி உண்டாக காரணமாகிவிடும்.
5. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் ஒற்றை தலைவலியை தடுக்க உதவும். அதிக நீர் குடிப்பது நீர் இழப்பை தடுக்கிறது. நீர்ச்சத்து குறைவதும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ