இன்றைய வாழ்க்கை முறையினால், உடல் பருமன் தொப்பை கொழுப்பு ஆகியவை, பொதுவான பிரச்சனையாக உள்ளன. இதனை குறைக்க கடுமையான டயட் அல்லது ஜிம் பயிற்சி தேவை என பலர் நினைக்கின்றனர். உடல் பருமனை குறைக்க, சிலர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றனர்.
சமீபத்தில் கேரளாவில், கடுமையான டயட்டை பின்பற்றியதால், உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல், உடல் பருமனை குறைக்க மேற்கொண்ட முயற்சி அவரது உயிரை பறித்துள்ளது. ஆனால், உடல் எடையை குறைக்க, கடுமையான டயட் அல்லது ஜிம் பயிற்சி எதுவும் தேவையில்லை. வாழ்க்கை முறையில் உணவு பழக்கத்தில், மேற்கொள்ளும் சிறிய மாற்றங்கள் சிறந்த பலன்களை கொடுக்கும்.
வெயிட் லாஸ் பானம்
காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் காபி டீக்கு பதிலாக, வெயிட் லாஸ் பானம் ஒன்றை அருந்துவது, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி கொழுப்பை எரிக்கும். அது சீரக நீராக இருக்கலாம். எலுமிச்சை இஞ்சி தேன் கலந்த பானமாக இருக்கலாம். லவங்கப்பட்டை அல்லது ஓமம் சேர்த்த பானமாக இருக்கலாம்.
காலை உணவு
காலை உணவு அதி முக்கியத்துவம் வாய்ந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவைத் தவிர்ப்பது மிக மிக தவறான செயல். காலை உணவு புரதம் மற்றும் நார்ச்சத்துடன், பல வகையான ஊட்டச்சத்துக்களை கொண்ட சமச்சீர் உணவாக இருக்க வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் தாராளமாக சேர்க்கப்பட வேண்டும். இவை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்பதோடு, நார்ச்சத்து நிறைந்தவை. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குடல் ஆரோக்கியம் சிறப்பாக இல்லை என்றால் எடை இழப்பு சாத்தியம் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
தண்ணீர்
உடல் எடை குறைய போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம். நீர் சத்து குறைபாடு செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். சாப்பிடும் போது அரை வயிறுக்கான உணவை சாப்பிட்டு, கால் பங்கு தண்ணீர் அருந்த வேண்டும். மீதி கால் பங்கு வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
சர்க்கரை மற்றும் இனிப்புகள்
உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரை மற்றும் இனிப்புகளை தவிர்க்க வேண்டும். முழுமையாக முடியவில்லை என்றால், பாதியாக குறைக்க முயற்சி செய்யலாம். இதனால் கலோரி உட்கொள்ளல் பெருமளவு குறைந்து உடல் எடை மடமடவென குறையும்.
உடற்பயிற்சி
நாள் ஒன்றுக்கு அரை மணி நேரமாவது உங்களால் முடிந்த உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி தேவை. இது உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.
தூக்கம்
உடல் பருமன் குறைய, நல்ல ஆழ்ந்த தூக்கம் அவசியம். தூக்கமின்மை மன அழுத்தத்தையும் பசியையும் அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முயற்சி செய்யவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | மூளையை சூப்பர் கம்ப்யூட்டர் போல் வேலை செய்ய வைக்கும் வால்நட்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









