தூக்கமின்மை பல்வேறு பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கிறது என்றால் மிகை இல்லை. மன அழுத்தம் உடல் பருமன் செரிமான பிரச்சனைகள் என, என்ன இதனால் சந்திக்கும் ஆரோக்கிய பாதிப்புகளை பட்டியலே போடலாம்.
இரவில் தூக்கம் சரியாக இல்லை என்றால், நம்மால் ஆற்றலுடன் செயல்பட இயலாது. தூக்கமின்மை நமது செயல் திறனை பெரிய அளவில் பாதிக்கும். தூக்கமின்மைக்கு பல காரணங்கள் இருக்கலாம், மோசமான உணவு பழக்கம், மன அழுத்தம், செரிமான பிரச்சனைகள், உடல் நலக் கோளாறுகள் (Health Tips) என பலவிதமான காரணங்கள் இருக்கலாம். இன்றைய டிஜிட்டல் உலகில், அதிக நேரம் கணினி மற்றும் மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதும் ஒரு காரணம்.
100 எண்ணுவதற்குள் தூங்கலாம்... டாக்டர் கொடுக்கும் அட்வைஸ்
இன்ஸ்டாகிராம் பிரபலமான டாக்டர். கணேஷ் என்பவர், 100 எண்ணுவதற்கு தூங்குவதற்கான ஒரு டிப்ஸை கொடுத்துள்ளார். 100, 99, 98 என 100 என்ற எண்ணில் இருந்து தலைகீழாக எண்ண தொடங்குவதால், தூக்கம் உங்கள் கண்களை சொருக ஆரம்பிக்கும் என்கிறார் மருத்துவர்.
படுத்த உடன் தூக்கம் கண்களை தழுவ
படுத்தவுடன் தூக்கம் உங்கள் கண்களை தழுவ, 100 என்ற எண்ணில் இருந்து தலைகீழாக எண்ணிக்கையை தொடங்குங்கள். ஒவ்வொரு எண்ணை சொன்ன பின், ஆழ்ந்த மூச்சை இழுத்து, வெளியே விடுங்கள். நடுவில் எண்ணிக்கை தவறினால் கவலை இல்லை. உத்தேசமாக உங்கள் மனதில் தோன்றும் ஒரு எண்ணில் இருந்து தொடங்கலாம். இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தும் விலகி, 50 எண்ணி முடிப்பதற்கு முன்பாகவே, ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம் என்கிறார் மருத்துவர்.
மன அழுத்தத்தை விரட்டும் டெக்னிக்
நூறிலிருந்து தலைகீழாக எண்ணும் போது, மனம் ஒருமுகப்பட்டு மனதில் உள்ள எண்ணங்கள் மறைவதோடு, மூச்சை ஆழ்ந்து உள்ளெழுத்து வெளியிடுவதால், சிறந்த மூச்சுப் பயிற்சியும் கிடைக்கிறது. இந்த பயிற்சியை மேற்கொள்ளும், உங்கள் படுக்கையில் தளர்வாக, வசதியான நிலையில் படுத்து கொண்டு, மெதுவாக எண்ணிக்கையை தொடங்கவும். ஒவ்வொரு எண்ணையும் மனதில் நினைத்துக் கொண்டே, மூச்சை நன்றாக இருக்கும் வெளியில் விடவும். 50 என்ற எண்ணை தொடும் முன்னரே நிச்சயம் தூக்கம் வரும் என்கிறார் மருத்துவர். நீங்களும் இன்றிரவே செய்து பார்க்கலாமே....
தூக்கமின்மை பிரச்சனைக்கான சில பொதுவான தீர்வுகள்
1. படுக்கைக்கு செல்வதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே இரவு உணவை முடித்து விட வேண்டும்.
2. இரவு உணவிற்கு ஜீரணிக்க எளிதான உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. சாப்பிட்ட பின் சிறிது தூரம் நடை பயிற்சி மேற்கொள்வது மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். மன அழுத்தத்தை போக்கும்.
4. படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவாவது, டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









