Simple Yoga Asanas To Relieve Headache :தலைவலியை சமாளிப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. முக்கியமான நாட்களில் வேலை செய்து கொண்டிருக்கும் போது வந்துவிட்டால், இந்த தலைவலியை எப்படி போக்குவது என்றே நம்மில் பலருக்கு தெரியாது. நமது நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் ஆக்கினாலே, இந்த தலைவலியும் நீங்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தினமும் காலையில் யோகாசனங்களை செய்தாலே தலைவலி நீங்கும் என்பது பல மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. அப்படி செய்ய வேண்டிய யோகாசனங்கள் என்ன தெரியுமா?
பாலாசனா:
பாலாசனா, நம் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் யோகாசனம் ஆகும். இது, முதுகு பிடித்தல், தோள்பட்டையில் இருக்கும் வலியை சரிசெய்தல், கழுத்து மற்றும் தலைவலிக்கு இது உதவுகிறது.
இதை செய்வதற்கு எப்படி?
தரையில் மண்டியிட்டு அமர்ந்து, உங்கள் கால் பெருவிரலை தொட்டு முழங்காலை விரித்த நிலையில் பாயில் மண்டியிட்டு அமர வேண்டும். குதிக்கால்கள் மேல் சாய்ந்து, மெதுவாக முன்னோக்கி மடித்து தலை நெற்றியை பாயில் வைக்கவும். கைகளை முன்னோக்கி நீட்டி, மெதுவாக சுவாசிக்கவும். இதனால் முதுகெலும்பு ரிலாக்ஸ் ஆகி, உடலும் ரிலாக்ஸ் ஆகும். இந்த ஆசனம் ஆழ்ந்து ரிலாக்ஸ் ஆக்க ஊக்குவிக்கிறது. இதனால், மன அழுத்தம் குறைக்கிறது மேலும் நரம்பு மண்டலத்தை சீராக்க உதவுகிறது.
உத்தனாசனம்:
இந்த மென்மையான ஆசனம் முதுகெலும்பு, கழுத்து மற்றும் தொடை எலும்புகளை ரிலாக்ஸ் ஆக்குகிறது. அதே நேரத்தில் மூளைக்கு புதிய ரத்த ஓட்டத்தையும் இது ஊக்குவிக்கிறது.
கால்களை இடுப்பு அளவுக்கு அகலமாக விரித்து நிற்கவும். உங்கள் இடுப்பை முன்னோக்கி மடித்து, உங்கள் மேல் உடல் தரையை நோக்கி படும்படி செய்யவும். சப்போட்டுக்காக உங்கள் முழங்கால்களை லேசாக வளைக்கவும். உங்கள் கைகளை பாயில் வளைத்து எதிர் முழங்கைகளைப் பிடிக்கவும்.
இது, கழுத்து மற்றும் தோள்பட்டையில் இருக்கும் வலியை நீக்கி, நரம்பு மண்டலத்தை சீராக்குகிறது. இதனால், தலைவலி குறையும் என்று நம்பப்படுகிறது.
விபரித கரணி:
இந்த யோகாசனம், உடல் ரிலாக்ஸ் ஆவதற்கும் மேல் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது.
சுவருக்கு அருகில் அமர்ந்து, உங்கள் கால்களை மட்டும் சுவற்றில் தூக்கி வைக்கவும். அப்படியே உங்கள் இரு பக்கங்களிலும் கைகளை நீட்டி நேராக பார்க்கவும். 5-10 நிமிடங்கள் மெதுவாக மூச்சு பயிற்சியுடன் சேர்த்து செய்யவும்.
இந்த ஆசனம், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதோடு உடல் சோர்வை குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை இது மேம்படுத்துவதோடு, ஒற்றை தலைவலியையும் சீராக்குகிறது.

சேது பந்தசனா:
இதனை ஆங்கிலத்தில் Bridge pose என்று கூறலாம். மார்பை மெதுவாக திறந்து, முதுகெலும்பை நீட்டி உடலில் ரத்த சுழற்சியை தூண்டுகிறது. இவை முதுகு மற்றும் கழுத்தில் இருக்கும் வலியை நீக்குகிறது.
தரையில் படுத்து, முதுகை நேராக வைத்து முழங்காலை வளைத்து கைகளால் பிடிக்க வேண்டும். கால்களை இடுப்பு அளவிற்கு அகலமாக விரித்து, தரையில் இருந்து உயர்த்தி மேலே எழுப்ப வேண்டும். பின்பு, கைகளை இரு பக்கங்களிலும் வைத்து மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். இது, முதுகுத்தண்டில் இருக்கும் அழுத்தத்தை நீக்கி ஹார்மோன்களையும் சமநிலை படுத்துகிறது. மேலும், உடலில் ஆக்சிஜனை அதிகரித்து தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்க... டயட்டில் அடிக்கடி சேர்க்க வேண்டியவை
மேலும் படிக்க | முகத்தில் தொங்கும் கொழுக் மொழுக் சதை! குறைக்கும் 7 உடற்பயிற்சிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









