)
காலையில் எழுந்த உடனேயே அதீத சோர்வும், உடல் வலியும் ஏற்படுகிறதா... நாள் முழுவதும் பலவீனமாக உணர்கிறீர்களா...? உடல் மிகவும் பாரமாக தோன்றுகிறதா. இவையெல்லாம் அடிக்கடி ஏற்பட்டால் அலட்சியம் செய்யக்கூடாது. உடல் வலியை உண்டாக்கக்கூடிய பொதுவான, பலரும் அறியாத சில காரணங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
தூக்கமின்மை அல்லது முழுமை அடையாத தூக்கம்
உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்க நாளொன்றுக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். முழுமையான தூக்கம் இல்லை என்றால் தசைகளுக்கு ஓய்வு கிடைக்காமல், ஆற்றல் அளவு பெருமளவு குறையும். இதன் காரணமாக உடல் வலியும் சோர்வும் (Health Tips) ஏற்படலாம்.
நீர்ச்சத்து குறைபாடு
உடலுக்கு சத்துக்களைப் போல நீர் சத்தும் மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்காத போது தசைகளில் இறுக்கமும் அழுத்தமும் அதிகரிக்கிறது. இதனால் உடல் வலி மற்றும் சோர்வு உண்டாகிறது. இதனால் தினமும் 7 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம்.
மன அழுத்தம்
மன அழுத்தம் உடல் ரீதியாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் செரிமான ஆரோக்கியம் முதல் இதய ஆரோக்கியம் வரை உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பெரிதளவு பாதிக்கப்படுகிறது. மன அழுத்தம் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், உடல் வலி ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரும்புச்சத்து குறைபாடு
இரும்புச்சத்து குறைபாடினால் பலவீனம் மற்றும் சோர்வு உண்டாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், உடலுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இரத்த சோகை இருந்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும். இதனால் ஏற்படும் தசை பலவீனம் உடல் வலிக்கு காரணமாகிறது.
வைட்டமின் டி குறைபாடு
எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. உடல் கால்சியம் சத்தை கிரகித்துக் கொள்ள வைட்டமின் டி தேவை. இந்த ஊட்டச்சத்தின் குறைபாடு எலும்புகள் மற்றும் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி உடல் வலியை ஏற்படுத்துகிறது.
வைரஸ் தொற்று அல்லது சளி இருமல் தொடர்பான வலி
பொதுவாக காய்ச்சல் சளி அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்டால், உடல் வலி உண்டாகும். தொற்று பாதிப்பு ஏற்பட்டால் தசைகளில் வீக்கம் மற்றும் வலி உண்டாகிறது. சில நேரங்களில் உடல் வலி, கடுமையான உடல்நல பிரச்சனையை உணர்த்தும் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ