உலர் திராட்சை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியவற்றுடன் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பியுள்ளன. இதில் இருக்கும் மருத்துவ குணங்களும் ஏராளம். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது முதல் மலச்சிக்கலை தீர்ப்பது வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் எண்ணிலடங்காதவை.
உலர் திராட்சையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு வகையில் பயனடையலாம். உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட, ஊற வைத்து சாப்பிடுவதால், அதன் ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் முழுமையாக பெறலாம். அதிலும் வெறும் வயிற்றில், ஊறவைத்த உலர் திராட்சையை நீருடன் அருந்துவதால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். இது குறித்து விவரமாக இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
1. காலையில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் இதில் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் உள்ளது.
2. உலர் திராட்சை சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.ஏனெனில் இதில் பொட்டாசியம் உள்ளது.
3. மலச்சிக்கலை தீர்க்கும் அருமருந்து உலர் திராட்சை. இதில் நிரம்பி உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி அஜீரண பிரச்சனைகளை நீக்குவதோடு, சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலுக்கு முடிவு கட்டுகிறது.
4. கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் உலர் திராட்சைக்கு உண்டு. இதனை வழக்கமாக சாப்பிட்டு வருவதால், கொழுப்பு கல்லீரல் அபாயமும் நீங்கும்.
5. திராட்சையில் காணப்படும் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகிய இயற்கை சர்க்கரைகள், உடலுக்கு ஆற்றலை வழங்கும் அற்புத சக்தி கொண்டவை.
மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை எல்லாம் பிட் ஆக இருக்க... தினம் ஒரு கப் மாதுளை போதும்
6. இரும்புச்சத்து நிறைந்துள்ள உலர் திராட்சை, ரத்த சோகையை நீக்கும் அருமருந்து. இதனை தினமும் சாப்பிடுவதால், பலனை கண்கூடாக காணலாம்.
7. உலர் திராட்சை எலும்புகளை வலுவாக்கும் ஆற்றல் கொண்டவை. அதோடு இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள், செல்களுக்கு ஏற்படும் சேதத்தை போக்கி, உடல் வீக்கத்தை கட்டுப்படுத்தி, பலவகையான வலிகளுக்கு நிவாரணியாக இருக்கும்.
8. உலர் திராட்சை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் பருவ கால நோய்களிலிருந்தும், தொற்று நோய்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.
9. சிறுநீரகப் பாதையில் தொற்று இருப்பவர்கள் இதனை வழக்கமாக சாப்பிட்டு வந்தால் தொற்று நீங்கி, பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
10. உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் உலர் திராட்சையை எடுத்துக் கொள்வதால், உடல் சூடு தணியும்.
ஊறவைத்த உலர் திராட்சையை தயாரிக்கும் முறை
இரவில், சுமார் 8 முதல் 10 வரை உலர் திராட்சைகளை எடுத்து, அதை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். காலையில், ஊறவைத்த உலர் திராட்சையை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். பொதுவாகவே உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிடுவதால் அதன் ஆரோக்கிய பலன்கள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உலர் திராட்சையை, அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, ஊறவைத்து சாப்பிடுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









