வைரல் டயட்டை நம்பிய 'டிக்டாக்' பிரபலம்... ஆனால் அதுவே ஆபத்தாகிவிட்டது - என்னாச்சு?

Health Tips: உடற்தகுதியுடன் இருப்பதற்காக சமூக வலைதள பிரபலம் ஒருவர், வைரலான டயட்டை பின்பற்றியது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 22, 2025, 05:02 PM IST
  • அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது.
  • அவர் வைரலான Carnivore டயட்டை பின்பற்றி உள்ளார்.
  • இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வைரல் டயட்டை நம்பிய 'டிக்டாக்' பிரபலம்... ஆனால் அதுவே ஆபத்தாகிவிட்டது - என்னாச்சு?

Health Tips: உடல் எடை குறைப்புக்கு முயற்சிப்பவர்கள் உரிய மருத்துவ நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு, அதன் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் உடற்பயிற்சி பயிற்றுநரின் ஆலோசனையும் முக்கியமாகும்.

Add Zee News as a Preferred Source

Health Tips: தன்னிச்சையாக செயல்படுவது நல்லதல்ல

ஆனால், பலரும் தற்போது இணையம் மூலமே உடல் எடை குறைப்பு நடவடிக்கையில் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். அதிலும் குறிப்பாக சிலர் உடற்தகுதி குறித்து பதிவிடும் இணைய பிரபலங்கள் சொல்லும் டிப்ஸ்களை பின்பற்றி பலரும் டயட்டை கடைபிடித்து, உடற்பயிற்சிகளை செய்து உடல் எடை குறைப்பை மேற்கொள்கின்றனர். ஆனால், இது ஆரோக்கியமான மற்றும் நல்லவிதமான செயல்முறை இல்லை என்பதை மட்டும் வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | வாயு தொல்லை அவதி? வறுத்த சீரகம் மற்றும் சிறிது சூடான தண்ணீர் போதும்..! முழு விவரம்

Health Tips: வைரலான டயட்டை பின்பற்றிய பெண்

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் ஈவ் கேத்தரின் என்ற பெண், இணையத்தில் வைரலாக பரவி வந்த டயட் (உணவுப்பழக்கம்) டிரெண்டை பின்பற்றிய நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உணவில் அதிகமாக புரதத்தை சேர்த்துக்கொண்டதால் அவரது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகியிருக்கிறது.

Health Tips: ஈவ் கேத்ரினின் உணவுப்பழக்கம்

23 வயதான அந்த பெண் வெளியிட்ட வீடியோவில், அவர் எப்படி புரதம் நிறைந்த உணவுகளுக்கு அடிமையானார் என்பது குறித்து விவரித்திருப்பார். அதாவது, அவரது காலை உணவில் 2-3 முட்டைகள் இருக்குமாம், அதேபோல் அதிக புரதச்சத்து நிறைந்த யோகர்ட்டை மதிய உணவில் சேர்த்துக்கொள்வாராம். அதேபோல், இரவு உணவுக்கு மாட்டிறைச்சியை சாப்பிட்டு வந்தாராம். இந்த உணவுப் பழக்கவழக்கத்தை அவர் தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளார்.

Health Tips: தெரிந்த அறிகுறிகள் என்ன? 

அப்போது, அவர் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டபோது, அவரது சிறுநீரில் அதிக புரதம் அளவு இருப்பதை குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவர் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லையாம். ஒருநாள் அவரை திடீரென மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டுச் செல்ல நேர்ந்ததாம். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருநாள் காலையில் எழுந்து சிறுநீர் கழிக்கும்போது, மொத்தமும் ரத்தமாக போயுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது அவரது சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்தது. அவர் அதீதமாக புரதச்சத்தை உட்கொண்டதே அவரது சிறுநீரகத்தில் கல்லை உருவாக்கியிருக்கிறது என தெரிவித்துள்ளனர். அவர் இணையத்தில் மிகவும் வைரலான Carnivore Diet என்னும் உணவுப்பழக்கத்தை கடைபிடித்து வந்துள்ளார்.

Health Tips: வாசகர்கள் கவனத்திற்கு...

உடல் எடையை குறைக்க முற்படுபவர்கள், உடற்தகுதியுடன் இருக்க நினைப்பவர்கள், அதிகம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக உடலுக்கு ஏற்ற புரதச்சத்தை உட்கொள்ள நினைப்பார்கள். ஆனால், நிபுணர்களின் ஆலோசனையின்றி இப்படி புரதச்சத்தை மட்டும் உட்கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கும் என்பது கேத்ரினுக்கு ஏற்பட்ட சம்பவத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

எனவே வாசகர்களாகிய நீங்களும் உடல் எடை குறைப்பு, உணவுப்பழக்கவழக்கத்தில் மாற்றம் ஆகியவற்றில் இறங்கும் முன்னர் உரிய நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | சுள்ளென்ற பச்சை மிளகாயில் நிறைந்திருக்கும்... சூப்பர் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News