Low Calorie Breakfast Recipes: எடை இழப்புக்கு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது அவசியம். காலை உணவு குறைவான கலோரிகளுடன், சத்தனாதாகவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டி, தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குவதாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் மோசமடைந்து வரும் உணவுப் பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறையும் சேர்ந்து நமது ஆரோக்கியத்திற்கு பல பிரச்சினைகளை உருவாக்குகின்றன. மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக அதிகரித்து வரும் உடல் பருமன் இன்று ஒரு கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. எடை இழப்புக்கு (Weight Loss Tips) ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது அவசியம்.
நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க காலை உணவு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும. காலை உணவு குறைவான கலோரிகளுடன், சத்தானதாகவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டி, தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குவதாகவும் இருக்க வேண்டும். இந்நிலையில், உடல் எடையை குறைக்க காலை உணவில் சேர்க்கக் கூடிய சிறந்த உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
முளை கட்டிய தானியங்கள் (Sprouts For Weight Loss)
காலை உணவில் முளைகட்டிய தானியங்களை உட்கொள்வது எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, நீங்கள் பாசிப்பருப்பு, கொண்டைகடலை, கொள்ளு போன்றவற்றுடன், பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் கலந்து சாப்பிட வேண்டும். முளைகட்டிய தானியங்களில் புரதம் மற்றும் நார்ச்சத்து ஏராளமாகக் காணப்படுகின்றன. இது வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது.
காய்கறிகள் பருப்பு சேர்த்த அவல் உப்புமா (Weight Loss Upma)
நீங்கள் எடை இழக்க விரும்பினால், உங்கள் காலை உணவில் நிச்சயமாக அவலைச் சேர்க்க வேண்டும். அவல் அதிலும் சிவப்பு அவல் ஊட்டச்ச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். உடல் எடையைக் குறைப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். இதில் உங்களுக்கு பிடித்த நிறைய காய்கறிகளுடன் வேக வைத்த கடலை பருப்பையும் சேர்த்து தயாரித்தால், அனைத்து சத்துக்களும் கொண்ட முழுமையான உணவாக மாறிவிடும். மேலும், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.
பாசிப்பயறு தோசை (Weight Loss Dosa)
காலை உணவாக சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒன்றை நீங்கள் சாப்பிட விரும்பினால், பாசிப்பயறு தோசையை முயற்சி செய்யலாம். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட் கோஸ் ஆகியவற்றை சேர்ப்பதால், ஒரு சூப்பர் புட் ஆக மாறிவிடும். இதைச் சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. இதன் காரணமாக நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இது எடை இழப்பில் உங்களுக்கு பெரிதும் உதவும்.
காய்கறிகள் கலந்து செய்த சப்பாத்தி (Weight Loss Chapaati)
கேரட், முள்ளங்கி, காலிஃபிளவர் அல்லது ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை துருவி மாவில் சேர்த்து தயாரிக்கப்படும் சப்பாத்தி மிகவும் ஆரோக்கியமானது. இதற்கு உங்களுக்குப் பிடித்தமான காய்கறிகளை நன்றாக துருவி அதில், உப்பு, சீரகம், செலரி போன்றவற்றை மாவில் சேர்த்து கலக்கவும். இதற்குப் பிறகு, மாவை நன்றாக பிசைந்து சப்பாத்தியாக தயாரித்து தயிருடன் பரிமாறவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ