கொண்டைக்கடலை அல்லது கொத்துக்கடலை புரதச்சத்தின் சிறந்த ஆதாரம். பயறு வகை தானியங்களில் கொண்டைக்கடலையை சூப்பர் ஃபுட் என அழைக்கலாம். அதிலும் முளைகட்டிய கொண்டைக்கடலை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். ஏனெனில் முளை கட்டுவதால் தானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகிறது என்று டயட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினமும் ஒரு படி கொத்துக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் ஒரு பிடி முளைகட்டிய கொண்டை கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் எண்ணில் அடங்காதவை. அந்த அளவிற்கு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது முதல், உடல் எடையை குறைப்பது வரை இதனால் கிடைக்கும் பயன்கள் ஏராளம். அதிகம் காலை உணவாக இதை எடுத்துக் கொள்வதால், நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் எனர்ஜியுடன் வேலை செய்யலாம்.
தொப்பை கொழுப்பை எரிக்கும் கொண்டைக்கடலை
புரதச்சத்து நிறைந்தது என்பதால், உடல் பருமன் தொப்பை கொழுப்பை எரிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டயட் தேர்வாக இருக்கும். புரோட்டின் நிறைந்துள்ளதால் வயிறு நிறைந்த உணர்வு கொடுக்கும். பசியை கட்டுப்படுத்தி இதன் மூலம் கலோரி உட்கொள்ளலை சிறப்பாக குறைக்கலாம்.
இதயத்தை வலுவாக்கும் முளைகட்டிய கொத்துக்கடலை
கொலஸ்ட்ரால் அளவை குறைக்க நினைப்பவர்கள், முளைகட்டிய கொண்டை கடலையை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் உள்ள புரதம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து, கெட்ட கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முளைகட்டிய கொத்துக்கடலை
கொண்டைக்கடலையை முளைகட்டி சாப்பிடுவதன் மூலம், செரிமானம் எளிதாகும். இதனால் அஜீரண பிரச்சனைகள் மீண்டும். மலச்சிக்கல் வாயு பிரச்சனைகள் போன்றவற்றிற்கு குப்பை சொல்லலாம். இதனால் செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
எலும்பு ஆரோக்கியம்
முளைகட்டிய கொத்துக்கடலையில், புரதம் மட்டுமல்லாது எலும்புகளை வலுப்படுத்த தேவையான கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதன் மூலம் மூட்டு வலி, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் போன்றவை வராமல் தடுக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொண்டைக்கடலை
முளை கட்டிய கொண்டைக்கடலையில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது ஆற்றலின் ஆதாரமாக இருப்பதால், நாள் முழுவதும் சோர்வு என்பதே இருக்காது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முறை கட்டிய கொத்துக்கடலை
முளைகட்டிய கொத்துக்கடலையில், ஓரளவு பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கனிமம் ஆகும். எனவே ஹாய் டிபி உள்ளவர்களுக்கு கொண்டைக்கடலை அருமருந்தாக இருக்கும்.
முளைகட்டிய தானியங்களை சாப்பிடும் சரியான முறை
முளைகட்டிய தானியங்கள் ஊட்டச்சத்தின் ஆதாரங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை காலை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும், காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் முளைகட்டிய தானியங்களில் வைட்டமின் சி சத்து அதிகமாக சேர்ந்து அமிலத்தன்மை அதிகம் இருக்கும். இதனால் அசிடிட்டி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதோடு முளைகட்டிய தானியத்தை சிறிது வேகவைத்து சாப்பிடுவது செரிமானத்திற்கு எளிதாக இருக்கும். அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி, வெள்ளரிக்காய் எலுமிச்சை சேர்த்து சாப்பிடுவதால் அதனை சமச்சீரான உணவாக மாற்றலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்ய சுகருக்கு பதில் ‘இதை’ எடுத்துக்கோங்க..
மேலும் படிக்க | எடை சட்டுன்னு குறைய அரிசிக்கு பதில் ‘இதை’ சாப்பிடலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









