மனிதன் அழகாக உணர்வதற்கு பற்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் பற்களில் உருவாகும் கறைகள் பலருக்கு பெரும் தொல்லைகளாக இருக்கின்றன. அந்தக் கறையை போக்குவதற்கு வீட்டு வைத்திய முறைகளை காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரவு தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை பற்களில் தேய்த்துவிட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பற்களின் மேற்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.


வெள்ளை எள்ளு விதையை, நன்றாக பொடி செய்து பற்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் முழுமையாக நீங்கிவிடும்.


பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.



கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.


மிக முக்கியமாக உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். அதேபோல், கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வந்தாலும் கறைகள் நீங்கும்.


மேலும் படிக்க | கொத்து கொத்தா முடி கொட்டுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்


அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இரவு உறங்கும் முன் பல் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.


மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தமா... இந்த பானங்களை பருகுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!