வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? பேராபத்து காத்திருக்கு..

Tea On Empty Stomach : நம்மில் பலருக்கு, தினமும் ஒரு கப் டீ குடிக்காமல் அந்த நாளே போகாதது போல இருக்கும். அப்படிப்பட்ட நபர்களுள் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்குதான் இந்த பதிவு.  

Written by - Yuvashree | Last Updated : Mar 31, 2026, 05:17 PM IST
  • வெறும் வயிற்றில் டீ குடிக்கலாமா?
  • மருத்துவர்கள் சொல்வது என்ன?
  • இதோ முழு விவரம்..
வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? பேராபத்து காத்திருக்கு..

Tea On Empty Stomach : நாமோ அல்லது நமது சர்கிளில் ஒருவரோ டீ குடிக்காமல் நாளே ஓடாது என்று டைலாக் சொல்வதை கேட்டிருப்போம். காலையில், எந்த முக்கிய வேலைகளை செய்வே ஆரம்பிப்பார்கள். அப்படி, நாள் முழுக்க டீ நினைப்புடனையே இருக்கும் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், உடல் ரீதியாக ஆபத்து வரலாமாம். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

ஒரு கப் டீ!

காலையிலும் மாலையிலும் ஒரு டீ குடிப்பதை நம்மில் பலர் வழக்கமாக கொண்டிருப்போம். இதை எத்தனை முறை குடிக்கிறோம் என்பதில் பிரச்சனை இல்லையாம், எதனுடன் கலந்து குடிக்கிறோம் என்பதில் பிரச்சனை உள்ளதாம். அப்படி தவறாக இதனை உட்கொண்டால் நல்லதை விட கெட்டதுதான் அதிகமாக நம் உடலுக்கு நடக்குமாம். 

உங்கள் டீயில் நிறைய சர்க்கரை போடுவது, உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கலாம். இது உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவதோடு, சர்க்க்கரை நோயை உண்டாக்கும் காரணியாகவும் இருக்கலாம். இப்படி அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வது, நுரையீரல் பாதிப்பையும் உண்டாக்கலாம்.

வெறும் வயிற்றில் டீ குடிப்பது பலருக்கும் பழக்கமாக இருக்கும். ஆனால், இது போகப்போக அசிடிட்டியை ஏற்படுத்தி, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் உள்ளிட்டவற்றை உண்டாக்கலாம். இது குறித்து பேசும் நிபுணர்களா, தினமும் காலையில் எழுந்ததும் முதலில் ஒரு டம்ளர் நீரை அருந்தி விட்டு பின்னர் டீ குடிக்கலாம் என்று கூறுகின்றனர். அதே சமயத்தில் இரவில் டீ குடிப்பது, உங்களின் தூக்கத்தையும் கெடுக்கலாம்.

ஹெல்தியான டீ..

கிரீன் டீயை பலரும் ஹெல்தியான டீ என்று கூறுகின்றனர். ஆனால், இதையும் அதிகமாக எடுத்துக்கொள்வதால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். கிரீன் டீ தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் சில பொருட்கள் உடலில் அனீமியா பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனை அதிகமாக குடிப்பதால், உங்கள் கால்சியம் லெவலும் அதிகரிக்கலாம்.

சூடாக டீ குடிப்பதால் உங்களின் நாக்கு, தொண்டை மற்றும் செரிமான மண்டலம் பாதிப்படையலாம். இது, உங்கள் வயிற்று புண் மற்றும் அசௌகரியத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, எப்போதும் டீ குடிக்கும் முன்னர் கொஞ்சம் அதை ஆர விட்டு குடிக்கவும்.

டீயுடன் நம்மில் பலர் பிஸ்கட், பஃப்ஸ் உள்ளிட்ட சில நொறுக்குத்தீனிகளையும் வைத்து சாப்பிடுவோம். இப்படி சாப்பிடுவது, நல்லதல்ல என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டீயுடன் தொட்டு சாப்பிடும் பெரும்பாலான பொருட்களில் மைதா, சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்பு உள்ளிட்டவை சேர்க்கப்படும். இது, செரிமானத்தை சீர்குலைக்க செய்யும். எடை கூடுவது, இதய நோய் பிரச்சனை வருவதும் இதனால் ஏற்படலாம்.

உங்கள் உடலுக்கு டீ எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதை பார்க்க வேண்டும். டீ குடித்த பின்பு உங்கள் வயிறு உப்பசமாக ஆகிறதா, நெஞ்செரிச்சல் உண்டாகிறதா என்பதை பாருங்கள். இது, உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் மேம்படுத்திக்கொள்ள உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க இனிப்புகள் மட்டுமே காரணமா? மறைமுக காரணங்கள் இதோ

மேலும் படிக்க | ஒல்லியாக இருப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமானவர்களா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News