நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் 5 நன்மைகள்! என்னென்ன தெரியுமா?

Health Benefits Of Eating Ice Apples : வெயில் காலத்தில் அதிகம் விற்கப்படும் உணவு பொருட்களுள் ஒன்று, நுங்கு. இதனை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் ஏற்படும் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 12, 2025, 04:43 PM IST
  • நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
  • எடை மேலான்மைக்கு உதவும்..
  • இதோ சில பலன்கள்
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் 5 நன்மைகள்! என்னென்ன தெரியுமா?

Health Benefits Of Eating Ice Apples : வெயில் காலம் தொடங்கினாலே, தாங்க முடியாத வெப்பம், சூடான காற்று, குளுகுளு பவுடர் என்று பல விஷயங்கள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்த்து, சம்மருக்கே உரிய சில உணவுகளும் நினைவிற்கு வரும். சுவையான மாம்பழம், மிளகாய்த்தூள் தூவிய அன்னாசிப்பழம், தர்பூசணி, கிரிணி பழ ஜூஸ்…இப்படி சில. இதனுடன் சேர்ந்து நம் நாவில் எச்சில் ஊற வைக்கும் இன்னொரு பொருள், நுங்கு. இதனை ஆங்கிலத்தில் ஐஸ் ஆப்பிள் என்று குறிப்பிடுவர். இதனை சாப்பிடுவதால், உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

Add Zee News as a Preferred Source

இயற்கை நீர்ச்சத்து:

நுங்கு சாப்பிட்டால் உடலுக்கு இயற்கையாக நீர் சத்து கிடைக்கும் என கூறப்படுகிறது. தர்பூசணி போலவே இவற்றதும் அதிக நீர்ச்சத்து இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை தடுக்க இதனை சாப்பிடும்போது உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட்ஸ் சத்துக்களை சேமிக்க உதவும். இதனால் அதிக வெப்பத்தால் வரும் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கலாம். 

நோய் எதிர்ப்பு சக்தி: 

நுங்கில் அதிக அளவு கால்சியம், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் இரும்பு சத்துக்கள் இருக்கின்றன. இந்த சத்துக்களால், நோய் எதிர்ப்பு சக்தி வளர்கிறது. அதிலும் வெயில் காலத்தில் குறிப்பாக பரவும் சில நோய்களை எதிர்த்துப் போராட, இது உதவுகிறது. 

செரிமான சக்தி: 

மூங்கில் அதிக அளவு பைபர் சத்துக்கள் இருக்கின்றன. இது செரிமானத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். வயிறு உப்பசம், குமட்டல், அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்கள் நுங்கை அவர்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சம்மர் பழம், அந்த பிரச்சனைகளை சரி சரியாக்க உதவும்.

இளமையாக வைத்திருக்க..

யாருக்குதான் வயதான தோட்டத்துடன் இருக்க பிடிக்கும்? இளமையாக இருக்க நினைத்தால், கண்டிப்பாக நாம் நுங்கை சாப்பிடலாம் என்று சிலர் கூறுகின்றனர். இது இளமையில் வயதான தோற்றம் வராமலும், சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுமாம். எனவே, இதனை உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென சிலர் கூறுகின்றனர்.

எடை மேலாண்மை: 

நுங்கை நமது டைட்டில் சேர்த்துக் கொண்டால் அது எடை மேலாண்மையையும் பார்த்துக் கொள்ளும் என கூறப்படுகிறது. இந்த நுங்கின் சில துண்டுகளை சாப்பிட்டாலே நம் வயிறு முழுமையானது போல உணர்வு கொள்ளும். இதனால் நமக்கு பசி உணர்வு ஏற்படாது. அதிகமாக சாப்பிட வேண்டும் என்று க்ரேவிங்கும் இருக்காது. அது மட்டும் கிடையாது, இதை சாப்பிடுவதில் நாம் புத்துணர்ச்சி பெற்றது போலவும் முழுதாக உடலுக்கு சக்தி கிடைத்தது போலவும் தோன்றுமாம். எனவே உடல் எடையை குறைக்கும் முடிவில் இருப்பவர்கள் நுங்கை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

சரும பராமரிப்பு..

வெயில் காலத்தில், வியர்வை அதிகமாக வருவதால் சருமம் பல பாதிப்புகளுக்கு உள்ளாகும். இவற்றை தடுக்க நூடு சாப்பிடலாம். சரும எரிச்சல், அலர்ஜி  உள்ளிட்டவற்றால் நீங்கள் சம்மர் டைமில் அவதிப்பட்டால் நுங்கை அந்த இடத்தில் தேய்க்கலாம். இது அந்த பிரச்சனைக்கு உடனடி நிவாரணையாக இருக்கும் என கூறப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு..

நுங்கு, பலவித சத்துக்களை கொண்டதாக இருக்கிறது. இதனால் சம்மரில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக சாப்பிடலாம் என கூறப்படுகிறது. அவர்களுக்கு ஏற்ற வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் இதில் இருக்குமாம். அதுமட்டுமில்லை, புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள், பால் சுரக்க, இதனை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News