இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த நோயாளிகள் இல்லாத வீட்டை பார்ப்பது அரிது என்ற சூழல் உருவாகிவிட்டது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையே இதற்கு பிரதான காரணமாகவும் கூறப்படும் நிலையில், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் கட்டாயம் உணவில் கவனம் செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்காக இப்போது ஒரு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஒரு புதிய ஆராய்ச்சியில் பாதாம் சாப்பிடுவது இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என தெரியவந்துள்ளது. பாதாம் பருப்பு தினமும் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) குறைக்க உதவுகிறது. இந்தியர்களுக்கு (Pre-Diabetes உள்ளவர்களுக்கு) இது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். மேலும், கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) குறைக்கும். அதாவது 5 யூனிட் வரை LDL கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வல்லமை உண்டு என அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இரத்த அழுத்தத்தை (BP) 0.17-1.3 mmHg வரை குறைக்க உதவுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பாதாம் நல்ல குடல் பாக்டீரியாக்களை அதிகரிக்கும், இது உடல் வளர்சிதை மாற்றத்திற்கு (Metabolic Health) நல்லது. இதனால், இதய நோய் வருவதைத் தடுக்கும். பாதாம் எடையை அதிகரிக்காது, மாறாக பசியைக் கட்டுப்படுத்தி எடை குறைக்க உதவுகிறது என்றும் அந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. Current Developments in Nutrition பத்திரிகையில் வெளியான இந்த ஆராய்ச்சி, பாதாம் இதயம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பதை உறுதிப்படுத்துகிறது.
டாக்டர் அனூப் மிஸ்ரா (Fortis Centre for Diabetes) கூறுகையில், "இந்தியர்களுக்கு பாதாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். தினமும் ஒரு கைப்பிடி பச்சை பாதாம் காலையில் அல்லது மாலையில் சிற்றுண்டியாக சாப்பிடலாம். பால், தேன் அல்லது பழங்களுடன் கலந்து சாப்பிடலாம்.
பாதாம் பருப்பை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பாதாம் பொதுவாக அனைவருக்கும் பாதுகாப்பானது, ஆனால் சில நபர்கள் கவனத்துடன் சாப்பிட வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்:
1. அலர்ஜி உள்ளவர்கள் - தோல் சிவத்தல், சுவாச பிரச்சினை உள்ளவர்கள் பாதாம் பருப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால், கடுமையான அலர்ஜி அனாஃபைலாக்சிஸ் (Anaphylaxis) ஏற்படலாம்.
2. சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் - பாதாமில் உயர் அளவு பாஸ்பரஸ் உள்ளது. சிறுநீரக நோயாளிகள் அதிகம் சாப்பிடினால் ரத்தத்தில் பாஸ்பரஸ் அளவு அதிகரிக்கும்.
3. ஹைபோதைராய்டிசம் உள்ளவர்கள் சாபிடக்கூடாது - பச்சைப் பாதாமில் காய்ரோஜன் (Goitrogens) உள்ளது. இது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கும். மிதமாக சாப்பிடலாம், ஆனால் அதிகம் தவிர்க்கவும்.
4. ஹைபோகிளைசீமியா (குறைந்த இரத்த சர்க்கரை) உள்ளவர்கள் - பாதாம் இரத்த சர்க்கரையைக் குறைக்கும், எனவே ஏற்கனவே குறைந்த சர்க்கரை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடாமல் கவனிக்க வேண்டும்.
5. சீரண பிரச்சினைகள் உள்ளவர்கள் - கடினமாக ஜீரணிக்கும் தன்மை உள்ளவர்களுக்கு வயிறு அசௌகரியம் ஏற்படலாம்.
மேலும் படிக்க | நீரிழிவு முதல் செரிமானம் வரை.... பல பிரச்சனைகளின் ஒரே தீர்வு தனியா
மேலும் படிக்க | கோடையில் தோல் அரிப்பு, தடிப்பு பிரச்சனையா? இந்த 5 விஷயங்களில் கவனம் தேவை
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ