நுரையீரலை டீடாக்ஸ் செய்து... வஜ்ரம் போல் வலுவாக்க உதவும் சில மேஜிக் உணவுகள்

இன்றைய கால கட்டத்தில் மோசமான உணவு பழக்கத்துடன், சுற்று சூழ மாசுபாடும், புகை பிடிக்கும் பழக்கங்களும் நுரையீரலில் நச்சுக்களின் கூடாரமாக ஆக்கி, அதன் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 26, 2025, 01:41 PM IST
  • சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதன் மூலமும் நுரையீரல் மீண்டும் வலிமை பெற முடியும்.
  • நுரையீரலில் குவிந்துள்ள அழுக்குகளை முழுவதுமாக அகற்றுவது எளிதல்ல.
  • ஒவ்வொரு முறை புகை பிடிக்கும் போதும் நுரையீரல் விஷத்தால் நிரம்புகிறது.
நுரையீரலை டீடாக்ஸ் செய்து... வஜ்ரம் போல் வலுவாக்க உதவும் சில மேஜிக் உணவுகள்

சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரலை, ஆரோக்கியமாக பராமரிப்பது மிக அவசியம். நுரையீரல் தீவிரமாக பாதிக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உருவாகிறது. இன்றைய கால கட்டத்தில் மோசமான உணவு பழக்கத்துடன், சுற்று சூழ மாசுபாடும், புகை பிடிக்கும் பழக்கங்களும் நுரையீரலில் நச்சுக்களின் கூடாரமாக ஆக்கி, அதன் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து வருகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாது, வேறு பல காரணங்களால் புகை பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் பலவீனமாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Add Zee News as a Preferred Source

மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற கடுமையான நோய்களின் அபாயம்

புகை மேகங்களுக்குள் வாழ்க்கையைத் தேடும் மில்லியன் கணக்கான மக்கள், ஒவ்வொரு முறை புகை பிடிக்கும் போது தங்கள் நுரையீரல் விஷத்தால் நிரம்புகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். சிகரெட் புகைப்பதால் நுரையீரலில் நச்சுப் பொருட்கள் மற்றும் அசுத்தங்கள் குவிந்து, சுவாசக் குழாயை படிப்படியாக அடைத்து, நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

இயற்கை வைத்தியங்கள் மூலம் நுரையீரல் டீடாக்ஸ்

நுரையீரல் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நிகோடினையும் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றுவதன் மூலம், நுரையீரலை பெருமளவில் சுத்தம் செய்து, ஆரோக்கியமான வாழ்க்கையைத் திரும்பப் பெற முடியும். புகைபிடிப்பதை விட்ட பிறகும், நுரையீரலில் குவிந்துள்ள அழுக்குகளை முழுவதுமாக அகற்றுவது எளிதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் சில வீட்டு மற்றும் இயற்கை வைத்தியங்கள் மூலம் அதை விரைவாக சுத்தம் செய்ய உதவும். கீழ்கண்ட உணவுகளை டயட்டில் சேர்ப்பதன் மூலமும்,  சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதன் மூலமும் நுரையீரல் மீண்டும் வலிமை பெற முடியும். மேலும் உடலில் ஆக்ஸிஜன் சுழற்சி மேம்படும். இது புதிய ஆற்றல் மற்றும் உயிர்ச்சக்தி மேம்பட வழிவகுக்கும்.

மஞ்சள் பால்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற தனிமம் மிகப்பெரிய ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. தினமும் இரவு மஞ்சள் கலந்த சூடான பால் குடிப்பதால் நுரையீரல் விரைவாக சுத்தம் செய்யப்பட்டு தொற்றுகள் தடுக்கப்படும். தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூளை சேர்த்து குடித்து வருவதும் நுரையீரல் சுத்தம் செய்ய உதவும்.  

வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சை

இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த நீரில், எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிப்பது, நுரையீரலை டீடாக்ஸ் செய்யும் அற்புதமான பானமாக இருக்கும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. நாள் முழுவதும் போதுமான அளவு வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் நச்சுகளை வெளியேற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்.

டீடாக்ஸ் டயட்

புதிய பழங்கள், பச்சை காய்கறிகள், இஞ்சி, பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வது நுரையீரலை நச்சு நீக்க உதவுகிறது. கீரை வகைகள் நுரையீரலை வஜ்ரமாக்கும் சிறந்த உணவு. அதிலும் பசலைக் கீரை சுவாச பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமாவை போக்கும் அருமருந்து என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

அதிமதுரம் என்னும் அருமருந்து

ஆயுர்வேதத்தில், அதிமதுரம் நுரையீரலுக்கு ஒரு டானிக்காகக் கருதப்படுகிறது. அதிமதுரம் தேநீர் குடிப்பது சுவாசக் குழாயை சுத்தம் செய்து அழுக்குகளை அகற்ற உதவுகிறது.

நீராவி பிடித்தல்

நுரையீரலை சுத்தம் செய்வதற்கான எளிதான வழி நீராவி எடுப்பதுதான். சூடான நீரிலிருந்து வரும் நீராவி நுரையீரல் குழாய்களைத் திறந்து உள்ளே சிக்கியுள்ள அழுக்குகளை அகற்ற உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நீராவி எடுப்பது நல்ல நிவாரணம் அளிக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மூட்டு வலி, கீல்வாதத்தை ஏற்படுத்தும்... யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் சில மேஜிக் உணவுகள்

மேலும் படிக்க | 30 நாளில் உடல் எடை குறைய உணவில் இவற்றை முற்றிலும் நீக்குங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News