காய்கறிகள் அனைத்துமே உடன் சத்துக்கள் நிறைந்தவை என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஆனால் பச்சை மிளகாய் என்று வரும்போது, தினமும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்ற எண்ணம் தான் பொதுவான கருத்தாக உள்ளது. காரம் அதிகம் உள்ளதால், கார சுவை பிடிக்காதவர்கள், அதனை ஒதுக்குவதை நாம் காணலாம்.
பச்சை மிளகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்தால், அதனை முழுமையாக ஒதுக்குவது, முற்றிலும் தவறு என்பதை பலர் உணர்வார்கள் என்று, ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகின்றனர். பச்சை மிளகாய் காய்கறி என்று குறிப்பிடுவதை விட, மசாலா என்றும் குறிப்பிடலாம். ஏனெனில் உணவிற்கு காரச் சுவையை வழங்க பச்சை மிளகாய் மிகவும் அவசியம்
பச்சை மிளகாயில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்
பச்சை மிளகாயில் வைட்டமின்களும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளது என்றும், இதில் மெட்டபாலிசத்தை தூண்டும் ஆற்றல் கொண்டது என்றும் ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில், வைட்டமின் ஏ வைட்டமின் பி6, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், லூட்டின் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. இது பல வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. எனினும், இதில் கேப்ஸைசின் அதிகம் உள்ளதால், இதை அளவோடு சாப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
பச்சை மிளகாயில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்
1. பச்சை மிளகாயில் மெட்டபாலிசத்தை தூண்டும் பண்பு உள்ளதால், ரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை அகற்றி, இதயம் ஆரோக்கியமாக (Heart Health) இருக்க உதவும்.
2. பச்சை மிளகாயில் உள்ள ரசாயனம், மூளையை தூண்டும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் இதன் காரணம், மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
3. கொழுப்பை எரிப்பதோடு, மெட்டபாலிசத்தை தூண்டும் ஆற்றலும் உள்ளதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், பச்சை மிளகாயை தினமும் ஒன்று இரண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
4. பச்சை மிளகாயில் உள்ள பொட்டாசியம் மெக்னீசியம், சீரான இதயத்துடிப்பிற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் உதவும். இதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
5. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும், பச்சை மிளகாய் உதவும். இதனைத் தொடர்ந்து உட்கொள்வதால், நீரழிவு நோயாளிகள் பலன் தரலாம்.
6. பச்சை மிளகாய் வாயில் உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும். இதனால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
7. இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
8. இரும்புச் சத்தை உடல் கிரகித்துக் கொள்ள, வைட்டமின் சி சத்து அவசியம். எனவே ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், பச்சை மிளகாயை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உதவும்.
9. பச்சை மிளகாயில் உள்ள சிலிகான் சத்து, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, முடி அதிகம் உதிர்வதை தடுக்க பெரிதும் உதவுகிறது.
10. இதில் உள்ள வைட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், கண் பார்வையை கூர்மையாக்க உதவும்.
பச்சை மிளகாய் பக்க விளைவுகள்
பச்சை மிளகாய் காரம் அதிகம் கொண்டது. எனவே அளவுக்கு மிஞ்சிய காரம், உடலுக்கு நல்லதல்ல இது செரிமான பாதையில் எரிச்சல் உணர்வு, வாயில் மற்றும் தொண்டையில் எரிச்சல் உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். எனவே இதனை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை
சட்னி உள்ளிட்ட உணவு வகைகளில், சிறிதளவு சேர்த்து சாப்பிடுவது பாதுகாப்பான வழியாகும். பச்சை மிளகாய் தொக்கு, இஞ்சி, புளி சேர்த்த பச்சை மிளகாய் ஊறுகாய் ஆகியவற்றை அளவோடு உண்டால் நன்மை பெறலாம். அளவிற்கு அதிகமானால், உடல்நல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க... இந்த 4 'குறுக்கு வழிகள்' - ஆரோக்கியம் சிறக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ