கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை...சிக்கனை விட அதிக புரதம் கொண்ட பாசிப்பயிறு கை கொடுக்கும்

பயறு மற்றும்  பருப்பு வகைகள் அனைத்துமே, புரதம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை தான். அதிலும் பாசிப்பயறு எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்களையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 23, 2025, 11:32 AM IST
  • பாசிப்பயறை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் தயக்கமின்றி சாப்பிடலாம்.
  • முளைகட்டி சாப்பிடுவதால், ஊட்டச்சத்து பலன்கள் இரட்டிப்பாவதோடு, செரிமானமும் எளிதாகும்.
  • பாசிப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்.
கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை...சிக்கனை விட அதிக புரதம் கொண்ட பாசிப்பயிறு கை கொடுக்கும்

பயறு மற்றும்  பருப்பு வகைகள் அனைத்துமே, புரதம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை தான். அதிலும் பாசிப்பயறு எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்களையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவு பாசிப்பயறு.  அதிலும் இதனை முளைகட்டி சாப்பிடுவதால், ஊட்டச்சத்து பலன்கள் இரட்டிப்பாவதோடு, செரிமானமும் எளிதாகும்.

Add Zee News as a Preferred Source

பாசிப்பயறில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பாசிப்பயறு புரதத்தின் சுரங்கம். அதோடு இதில் கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து, தாது பொருட்கள் ஆகியவை நிறைந்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் இதனை தயக்கமின்றி சாப்பிடலாம். செரிமானத்திற்கு மிகவும் எளிதான உணவு என்பதை இதற்கு காரணம். சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை விட பாசிப்பயறில் அதிக புரதம் உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பாசிப்பயிரை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை உட்கொண்டாலே, புரதச்சத்து குறைபாடு ஏற்படாது என்கின்றனர்.

பாசிப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்

வலுவான தசைகள் மற்றும் எலும்புகள்

பாசிப்பயிரில் தசைகளை வலுவாக்கும் புரதச்சத்துடன், மக்னீசியம் வைட்டமின் பி, ஃபோலேட், கால்சியம், தாமிரம் துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், தசைகள் மற்றும் எலும்புகள் இரண்டும் வலுவாக இருக்கும்.

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் சிறந்த உணவு

உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்பதை மறுக்க இயலாது. பாசிப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பு குறைகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க அனுமதிப்பதில்லை.

உடல் பருமன் குறைய உதவும் சிறந்த டயட்

உடல் பருமன் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள நிலையில், பாசிப்பயறை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், உடல் எடையை நன்றாக குறைக்கலாம். இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதை இதற்கு காரணம். இவை இரண்டுமே அதிக கலோரிகளை எரித்து, உடலில் இருந்து கொழுப்பை கரைக்க தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்கள்.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வைத் தரும் சிறந்த உணவு

பொதுவாக செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும், உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படாது. அந்த வகையில் செரிமானம் சிறப்பாக இருக்கவும், மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கவும் பாசிப்பயறு மிகவும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஜீரணம் சிறப்பாக இருக்கும்.

இளமையை காக்க உதவும் சிறந்த உணவு

திசுக்களில் ஏற்படும் பாதிப்பை சீர் செய்யும் ஆற்றல் கொண்ட பாசிப்பயறு, இளமையை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுவதுடன், முதுமை காரணமாக ஏற்படும், மூட்டு வலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் உணவு

நீரழிவு நோயாளிகள் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளில், பாசிப்பயறு முக்கிய இடம் வகிக்கிறது. இதில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க |  தொடர்ந்த வயிறு வலி – சாதாரணமா? அல்லது எச்சரிக்கையா? மறைந்துள்ள ஆபத்துகள்..

மேலும் படிக்க | தசைகளுக்கு வலிமை தரும் உணவுப் பட்டியலில் வாழைக்காய் முதன்மை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News