வியக்க வைக்கும் நட்சத்திர சோம்பு... ஆயுர்வேத மருத்துவர் கூறும் ஆச்சர்ய தகவல்கள்

Star Anise: நட்சத்திர சோம்பு அல்லது அன்னாசி பூ என்னும் மசாலா உணவிற்கு அற்புதமான மணத்தை தரக்கூடியது. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2025, 05:26 PM IST
  • நட்சத்திர சோம்பு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
  • உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, தொற்று நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
  • நுரையீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்தும் திறன் நட்சத்திர சோம்பிற்கு உண்டு.
வியக்க வைக்கும் நட்சத்திர சோம்பு... ஆயுர்வேத மருத்துவர் கூறும் ஆச்சர்ய தகவல்கள்

நட்சத்திர சோம்பு அல்லது அன்னாசி பூ என்னும் மசாலா உணவிற்கு அற்புதமான மணத்தை தரக்கூடியது. குருமா, பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களில் நட்சத்திர சோம்பு கட்டாயம் இடம் பெற்று இருக்கும். ஆங்கிலத்தில் இதனை ஸ்டார் அனீஸ் (Star Anise) என்று கூறுவார்கள். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Add Zee News as a Preferred Source

பஞ்சாபில் உள்ள பேப்ஸ் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டாக்டர் பிரமோத் ஆனந்த் திவாரி (எம்.டி) கூறுகையில், "நட்சத்திர சோம்பில் தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இதை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம், பல நோய்களைத் தவிர்க்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் (Health Tips). இதை  தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து தேநீர் வடிவத்திலோ அல்லது மசாலா வடிவத்தில் உணவில் சேர்த்தும் உட்கொள்ளலாம்" என்கிறார்.

நட்சத்திர சோம்பை உட்கொள்ளும் சரியான முறை

ஆயுர்வேத நிபுணர் நட்சத்திர சோம்பை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதையும் கூறினார். இது குறித்து விரிவான தகவல்களை அளித்த அவர், "நீங்கள் இதை டீயாக தயாரித்து தேநீர் போல குடிக்கலாம். இதற்கு, கொதிக்கும் நீரில் இஞ்சி மற்றும் ஏலக்காயுடன் நட்சத்திர சோம்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதை வடிக்கட்டிக் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, தொற்று நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது" என்றார்.

பருவகால நோய்களுக்கு நன்மை பயக்கும் அற்புத மசாலா

தேநீருடன் சேர்ந்து, நட்சத்திர சோம்பு கஷாயம் பருவகால பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். "நட்சத்திர சோம்பில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. சளி, இருமல் மற்றும் நிமோனியா போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்தும் திறன் நட்சத்திர சோம்பிற்கு உண்டு. எனவே, நுரையீரல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற நட்சத்திர சோம்பைப் பயன்படுத்தலாம். " என்று டாக்டர் பிரமோத் கூறினார்.

வீக்கம் அல்லது வலிபோக்கும் அற்புத இயற்கை வலி நிவாரணி

உடலில் எங்கேயாவது வீக்கம் அல்லது வலி பிரச்சனை இருந்தால், நட்சத்திர சோம்பு அல்லது அதன் பொடியை கடுகு எண்ணெயில் கலந்து தடவினால் வீக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இதை தினமும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும். இது வயிற்று வலி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. கடுகு எண்ணெய் பொதுவாகவே, மூட்டுகளுக்கு நெகிழ்வைக் கொடுத்து. 

தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கும் அருமருந்து

"இன்றைய காலகட்டத்தில், பணிச்சுமை மற்றும் கேஜெட்களை அதிகம் சார்ந்திருப்பதன் காரணமாக தூக்கமின்மை ஒரு பொதுவான  பிரச்சனையாக மாறிவிட்டது. இருப்பினும், சக்ரபூல் தூக்கமின்மை பிரச்சனையை சமாளிக்க உதவுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தூக்கமின்மை பிரச்சனையை நீக்கி, சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது," என்று நட்சத்திர சோம்பு பற்றி ஆயுர்வேத மருத்துவர் மேலும் விளக்கினார்.

மேலும் படிக்க | மூளை - எலும்புகளை பாதிக்கும் தாமிரச்சத்து குறைபாடு... தீர்வைத் தரும் சில சூப்பர் உணவுகள்

மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ஆபத்து: இவற்றை டயட்டில் உடனே சேருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News