)
நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம், உடலில் ஓடும் இரத்தத்தை சுத்தம் செய்து, அதில் உள்ள நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் முக்கிய வேலையை மேற்கொள்கிறது. சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை என்றால், உடலில் நச்சுக்கள் சேர்ந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான கடுமையான உடல்நல பிரச்சனைகள் உண்டாகலாம். சிறு நீரக பாதிப்பினால், மூளை, இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, கடுமையான உடல் நல சிக்கல்களை ஏற்படுத்தும்.
சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள் ( Symptoms Of Kidney Issues)
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சமநிலையற்ற உணவு, குறைந்த தண்ணீர் குடிப்பது மற்றும் அதிக உப்பு சாப்பிடுவது சிறுநீரகத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக சிறுநீரகத்தில் வீக்கம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளதற்கான அறிகுறிகளை, உரிய நேரத்தில் கண்டறிவதன் மூலம், தீவிர உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். இந்த பதிவில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் (Health Tips) குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிறுநீரில் நுரை உருவாகும் நிலை
உங்கள் சிறுநீரில் நுரை உருவாகத் தொடங்கினால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது சிறுநீரகத்தில் வீக்கம் அல்லது செயலிழப்பு ஏற்பட இருப்பதை உணர்த்தும் எச்சரிக்கை. சிறுநீரகம் பலவீனமாக இருக்கும்போது, புரதம் சிறுநீர் வழியாக வெளியேறத் தொடங்குகிறது. இது சிறு நீரில் நுரை ஏற்பட காரணமாகிறது இந்த நிலை மருத்துவ மொழியில் புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது. எனவே, அளவிற்கு அதிகமாக நுரையுடன் கூடிய சிறுநீரைக் கண்டால் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீரகத்தின் வடிகட்டி அமைப்பில் சிக்கல் இருக்கும்போது, உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்ற அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உண்டாகும். நாள் முழுவதும் பல முறை அசாதாரணமான வகையில் சிறுநீர் கழிக்க நேரிட்டால், இது சிறுநீரக வீக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் இது UTI அதாவது சிறுநீர் தொற்றுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம். எனவே, மருத்துவரிடம் பரிசோதிப்பது அவசியம்.
சிறுநீர் அடர் அல்லது பழுப்பு நிறத்தில் இருத்தல்
பொதுவாக சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். ஆனால் அது திடீரென்று அடர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் தோன்றத் ஆரம்பித்தால், அது சிறுநீரகப் பிரச்சினையை உணர்த்தும் அறிகுறியாக இருக்கும். அதை புறக்கணிக்காதீர்கள். இது சிறுநீரகத்தில் வீக்கம் அல்லது கற்கள் இருப்பதை உணர்த்தும் அறிகுறியாகவும் இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிய அணுகி ஆலோசனையை மேற்கொள்ளுங்கள்.
உடல் மற்றும் முகத்தில் காணப்படும் வீக்கம்
உடலில் இருந்து அதிகப்படியாக உள்ள திரவத்தை அகற்றும் வேலையை செய்யும் சிறுநீரகம், சரியாக வேலை செய்யாமல் போனால், உடலில் நீர் சேர்ந்து, உடலில் வீக்கங்கள் தோன்றலாம். முக்கியமாக முகம், பாதம் மற்றும் கணுக்கால்களில் தோன்றும் வீக்கத்தை அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவரை அணுகி, ஆலோசிப்பது நல்லது.
காரணம் இல்லாமல் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனம்
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது இரத்தத்தில் நச்சுக்கள் சேர்ந்து, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை உருவாகும். இதனால் பலவீனம் அல்லது அதீத சோர்வு ஏற்படலாம். காரணமும் இல்லாமல், அதீத சோர்வு மற்றும் பலவீனம் தொடந்து நீடித்தால், மருத்துவரை அணுகி, ஆலோசிப்பது நல்லது.
பசியின்மை மற்றும் குமட்டல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள்
சிறுநீரகங்கள் செயல் திறன் குறையும், உடலில் நச்சுக்கள் சேர ஆரம்பிக்கும். இது செரிமான அமைப்பை பாதித்து, பசியின்மையை உண்டாக்கும். உணவு சரியாக செரிமானம் ஆகாமல், வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகளும் அடிக்கடி ஏற்படும். எனவே அடிக்கடி ஏற்படும் செரிமான பிரச்சனையை அலட்சியம் செய்யக் கூடாது.
மேலே குறிப்பிட்டுள்ள சிறுநீரக பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், விரைவில் ஒரு மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம், சிறுநீரகத்திற்கு ஏற்படும் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம். மேலும், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ