சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகின்றன. அவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல கடுமையான நோய்களுக்கு தீர்வை அளிக்கும் ஒரு சஞ்சீவியாகவும் செயல்படுகின்றன. இந்த சிறப்பு மசாலாப் பொருட்களில் ஒன்று பெருஞ்சீரகம் என்னும் சோம்பு. சைவ மற்றும் அசைவ கிரேவி வகைகள், குருமா, பிரியாணி என அனைத்து வகை சமையல்களிலும் சுவையையும் மணத்தையும் கூட்ட பெருஞ்சீரகம் இன்றியமமையாதது.
பலருக்கு உணவு உண்ட பிறகு கண்டிப்பாக சோம்பு சாப்பிடும் இருக்கும். உணவு உண்ட பிறகு பெருஞ்சீரகத்தை மெல்லுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் சாப்பிடுவது எவ்வளவு நன்மை பயக்கும் மற்றும் எந்தெந்த நோய்கள் குணமாகும் என்பதை அறிந்து கொள்வோம்.
உணவு விரைவாக ஜீரணமாக உதவும் சோம்பு
பெருஞ்சீரகத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் நொதிகள் உள்ளன. இதன் காரணமாக உணவு விரைவாகவும் எளிதாகவும் செரிக்கப்படுகிறது. எனவே, சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடலாம். பெருஞ்சீரகத்தில் உள்ள கூறுகள் உணவை விரைவாக ஜீரணிக்க மிகவும் உதவியாக இருக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையை குறைக்க உதவும் மசாலா
பெருஞ்சீரகம் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இது கொழுப்ப்பை எரிக்க உதவுகிறது அதோடு, குடல் இயக்கத்தை துரிதப்படுத்துகிறது. இதனல், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்
வாயு மற்றும் அஜீரணத்தை போக்கும் உணவு
கருஞ்சீரகத்தில் உள்ள கார்மினேடிவ் பண்புகள் வாயு மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது. சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட்டால், உங்கள் வயிற்றில் வாயு உருவாவதைத் தடுக்கலாம். தவிர, அஜீரணக் கோளாறுகளையும் நீக்குகிறது. எனவே, நீங்கள் நிச்சயமாக அதை உட்கொள்ள வேண்டும்.
வாய் துர்நாற்றத்தை போக்கும் உணவு
சாப்பிட்ட பிறகு வாய் துர்நாற்றத்தை அகற்றவும் சோம்பு பயனுள்ளதாக இருக்கும். வெங்காயம் அல்லது முள்ளங்கியை சாலட்டில் சாப்பிட்ட பிறகு அதன் வாசனை வாயில் நீண்ட நேரம் இருக்கும். அதனை போக்க சோம்பு உதவும். பெருஞ்சீரகத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவுகிறது என ஆயுர்வேத நிபுணர்களின் கூறுகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் உணவு
பெருஞ்சீரகத்தில் வைட்டமின் சி உள்ளது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். இதில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
கண்பார்வையை கூர்மையாக்கும் சோம்பு
பெருஞ்சீரகம் நேத்ர ஜோதி எனவும் அழைக்கப்படுகிறது. கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ இதில் அதிகம் உள்ளது. எனவே, கண் அழுத்த நோய் என்னும் கிளைகோமாவிலிருந்து கண்களை பாதுகாக்கிறது. கண் திரையை வலுப்புத்தி கண் பார்வையையும் கூர்மையாக்குகிறது.
குறிப்பு: எனினும் பெருஞ்சீரகத்தை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அலவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இது உங்கள் உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | அதிகாலை திடீரென தூக்கம் கலைகிறதா? ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை
மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... வியக்க வைக்கும் பலன்களைத் தரும் ப்ரோக்கோலி
மேலும் படிக்க | குறட்டையால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









