மையோனைஸிற்கு தடை... தமிழ்நாடு அரசு திடீர் உத்தரவு - என்ன பிரச்னை?

One Year Ban For Mayonnaise: முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 24, 2025, 08:19 AM IST
  • கடந்த ஏப்ரல் 8ஆம் தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்கு தடை
  • பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிக்கிறது - தமிழ்நாடு அரசு
  • உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனைக்கு தடை - தமிழ்நாடு அரசு
மையோனைஸிற்கு தடை... தமிழ்நாடு அரசு திடீர் உத்தரவு - என்ன பிரச்னை?

One Year Ban For Mayonnaise: முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

Mayonnaise Banned In TN: மையோனைஸிற்கு ஓராண்டு தடை

இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி, முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக தமிழ்நாடு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mayonnaise Banned In TN: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ஆம் தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மையோனைஸை பொதுவாக ஷவர்மா, சிக்கன் தந்தூரி ஆகியவற்றுடன் மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள், இளைஞர்கள் ஏன் வயதானவர்கள் கூட மையோனைஸை அதிகளவில் எடுத்துக்கொள்ள விருப்பப்படுகின்றனர். எனவேதான், தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) பொதுமக்களின் நலன் கருதி இந்த மையோனைஸிற்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. 

Mayonnaise: மையோனைஸை எப்படி செய்வார்கள்?

மையோனைஸை வழக்கமாக எண்ணெய், வினிகர் அல்லது எலுமிச்சை சாறு, முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இதில் சில நேரங்களில் கடுகு அல்லது பிற சுவையூட்டல்களும் சேர்க்கப்படும். அதாவது, இவற்றை ஒன்றாக சேர்த்து நீண்ட நேரத்திற்கு கலக்கினால், ஒரு அடர்த்தியான நிலைக்கு வரும். இதுதான் மையோனைஸை செய்யும் அடிப்படை வழிமுறையாகும்.

Mayonnaise: மையோனைஸை நல்ல முறையில் சேமிப்பது முக்கியம்

இதில் முட்டை சேர்க்கப்படுகிறது என்றாலும் எண்ணெய் அதிகளவு சேர்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு குறிப்பிட்டதை போல் முறையாக சேமித்து வைக்காமல் இருப்பதும் பெரும் பிரச்னையாகும். குறிப்பாக வெப்பமான காலநிலையில், மையோனைஸை மோசமான முறையில் சேமித்து வைப்பதன்மூலம் உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயமும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மையோனைஸை குளிரான இடங்களிலேயே சேமித்து வைக்க வேண்டும். அதை வைத்திருக்கும் பாத்திரங்களும் சுத்தமாக இருக்க வேண்டும்.

Mayonnaise: மையோனைஸில் சத்து இருக்கா?

இவை ஒருபுறம் இருக்க, இதில் பெரியளவில் ஆரோக்கிய நன்மைகளும் இல்லை. மையோனைஸை ஆலிவ் ஆயில் அல்லது அவகாடோ ஆயில் போன்ற வகையில் ஆரோக்கியமான பொருள்களுடன் தயாரித்தால் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் கிடைக்கும். இவை இதயத்திற்கு நல்லது எனலாம். ஆனால், அதில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மிக முக்கியம். மேலும், இதில் குறைந்தளவில் வைட்டமிண் E இருக்கிறது. 

Mayonnaise: மையோனைஸால் வரும் உடல்நலப் பிரச்னைகள்

இருப்பினும் மையோனைஸ் சாப்பிடுவதில் ரிஸ்கே அதிகம் எனலாம். இதில் பச்சை முட்டைகளை பயன்படுத்துவதால் ஃபுட் பாய்சன் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் பச்சை முட்டையில் இருக்கும் Salmonella பாக்டீரியாவால் ஃபுட் பாய்சன் ஏற்படலாம். முட்டையை முறையாக சமைத்தால் மட்டுமே இந்த பாக்டீரியாவை நீர்த்துப்போகச் செய்ய இயலும் 

இது அதிக கலோரி மற்றும் அதிக கொழுப்புச்சத்தை கொண்டதாகும். ஒரு டேபிள் ஸ்பூன் மையோனைஸை சாப்பிட்டாலும் 90 கலோரிகளை பெறுவீர்கள். ஏனென்றால் இதில் கொழுப்பு நிறைந்திருக்கிறது. இதை நீங்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், உடல் எடையும் அதிகரிக்கும். முட்டையின் மஞ்சள் கரு சேர்க்கப்படும் நிலையில், அதில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம். நீங்கள் அதிகளவு சேர்த்துக்கொள்ளும்போது இதயத்திற்கும் இது ஆரோக்கியமானது இல்லை.

(பொறுப்பு துறப்பு: மையோனைஸில் உள்ள சத்துக்கள் மற்றும் மையோனைஸால் ஏற்படும் உடல் நல பிரச்னைகள் உள்ளிட்டவை பொதுவான தகவல்கள் ஆகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க |  மாரடைப்பு தொடர்பான பாதிப்புகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் - அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்...!!

மேலும் படிக்க | கல்லீரலை கடுமையாக பாதிக்கும் 5 முக்கிய பழக்கங்கள் - எச்சரிக்கை அவசியம்..!!

மேலும் படிக்க | 130kg to 60kg.. ஆச்சரியமூட்டும் உடல் எடை குறைப்பு பயணம்.. ரகசியத்தை பகிர்ந்த பெண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News