நடக்கும்போது இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை!! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகிறது!!

High Cholesterol Symptoms While Walking: கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் புற தமனி நோய் (PAD) போன்ற கடுமையான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 19, 2025, 08:24 PM IST
  • எல்டிஎல் கொழுப்பின் ஐந்து முக்கிய அறிகுறிகள்.
  • இவை கால்களில் தெரியும்.
  • அவற்றை பற்றி இங்கே காணலாம்.
நடக்கும்போது இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை!! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகிறது!!

High Cholesterol Symptoms While Walking: இன்றைய அவசர உலகில் அதிகரிக்கும் வாழ்க்கை முறை நோய்களில் உயர் கொலஸ்ட்ரால் அளவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (LDL) கொழுப்பின் அளவு அதிகரிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இது 'கெட்ட கொழுப்பு' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது நரம்புகளில் குவிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது.

Add Zee News as a Preferred Source

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் புற தமனி நோய் (PAD) போன்ற கடுமையான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். உடலில் எல்டிஎல் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​அதன் அறிகுறிகள் பெரும்பாலும் நடக்கும் போது அல்லது உடல் செயல்பாடுகளின் போது தெரியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை புறக்கணிக்கப்பட்டால் அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகலாம்.

புற தமனி நோய் கால்கள் மற்றும் கைகளுக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது நடக்கும்போது வலி, கூச்ச உணர்வு அல்லது குளிர்ச்சியை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினை சரியான நேரத்தில் கையாளப்படாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும். அதிகரித்த எல்டிஎல் கொழுப்பின் ஐந்து முக்கிய அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். பிரச்சனை இருந்தால், இந்த அறிகுறிகளை நடக்கும்போது உணரலாம். ஆனால், இவற்றை புறக்கணிக்காமல் இருப்பது மிக அவசியமாகும்.

இடைப்பட்ட கிளாடிகேஷன் (Intermittent Claudication)

புற தமனி நோயின் மிகவும் பொதுவான அறிகுறி இடைப்பட்ட கிளாடிகேஷன் ஆகும். இதில், நடக்கும்போது அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போது கால்களில் பிடிப்புகள் அல்லது தசைகளில் வலியை அனுபவிக்க நேரிடும். இந்த வலி நடப்பதை நிறுத்திய பிறகு சரியாகிவிடும். ஆனால் மீண்டும் நடக்கும்போது இது மீண்டும் வரக்கூடும். நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால் தசைகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததால் இது நிகழ்கிறது.

கால்களில் வலி மற்றும் கனத்தன்மை

அதிகரித்த LDL கொழுப்பின் மற்றொரு அறிகுறி கால்களில் வலி, சோர்வு அல்லது கனமாக இருப்பது. ஆடுசதைகள், தொடைகள் அல்லது இடுப்பு பகுதியிலும் இதனால் வலி ஏற்படலாம். குறிப்பாக நடக்கும்போது இந்த வலி நன்றாக தெரியும். இந்தப் பிரச்சனை படிப்படியாக தீவிரமடையக்கூடும். இந்த அறிகுறி தெரிந்தால், குறுகிய இடைவெளியில் நடப்பதை நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டியிருக்கும்.

குளிர்ந்த பாதங்கள்

நடக்கும்போது அல்லது உடல் செயல்பாடுகளைச் செய்யும்போது உங்கள் கால்கள் அல்லது கணுக்கால்களில் அசாதாரண குளிர்ச்சியை உணர்ந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். இது LDL கொழுப்பு நரம்புகள் குறுகி இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். கடுமையான நிலைமைகளில், பாதங்களின் நிறம் நீலம் அல்லது மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.

கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை

நடக்கும்போது கால்களில் கூச்ச உணர்வு அல்லது மரத்துப்போதல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், அவையும் அதிகரித்த LDL கொழுப்பின் அறிகுறியாக இருக்கலாம். இரத்த ஓட்டம் சரியாக இல்லாதபோது இது நிகழ்கிறது. இதன் காரணமாக நரம்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை ஏற்படுகின்றது. இந்த நிலை நரம்பு சேதத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

தசை பலவீனம்

எல்டிஎல் கொழுப்பின் அதிகரிப்பு தசை பலவீனத்தை ஏற்படுத்தும். நடக்கும்போது சமநிலை இழப்பு அல்லது நீண்ட நேரம் நிற்பதில் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம். படிப்படியாக இந்த நிலை கால்களின் செயல்பாட்டுத் திறனைப் பாதித்து, கீழே விழும் அபாயத்தை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொடர்ந்து 15 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பராய் குறைக்க உதவும் 7 பெஸ்ட் வழிகள்: ட்ரை பண்ணி பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News