சிறுநீரக ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் பானங்கள்: தொடவே தொடாதீங்க

Worst Drinks for Kidneys: சிறுநீரகங்களுக்கு விஷமாய் மாறக்கூடிய சில ஆபத்தான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2025, 09:00 PM IST
  • சில பொதுவான பானங்கள், நமது சிறுநீரகங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன.
  • இவற்றை தவிர்க்க வேண்டியது மிக அவசியம்.
  • அத்தகைய பானங்களின் லிஸ்ட் ஒதோ.
சிறுநீரக ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் பானங்கள்: தொடவே தொடாதீங்க

Worst Drinks for Kidneys: இது கோடை காலம். இந்த பருவத்தில் மக்கள் நாள் முழுவதும் பல வகையான பானங்களை அருந்துகிறார்கள். வெப்பத்தைத் தணிக்க, சோர்வைப் போக்க, அல்லது சுவைக்காக என்று மக்கள் குடிக்கும் பல வகையான பானங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்துகின்றன.

Add Zee News as a Preferred Source

நாம் சிந்திக்காமல் ஒரு நாளைக்கு பல முறை உட்கொள்ளும் சில பொதுவான பானங்கள், நமது உடலின் மிக முக்கியமான உறுப்பான சிறுநீரகங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சிறுநீரக ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க, உடனடியாக அத்தகைய பானங்களிலிருந்து விலகி இருக்க வேண்டியது மிக அவசியமாகும். சிறுநீரகங்களுக்கு விஷமாய் மாறக்கூடிய சில ஆபத்தான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

அடர் நிற சோடாக்கள்

கருப்பு நிற குளிர்பானங்களில் (கோலா போன்றவை) அதிக அளவு பாஸ்போரிக் அமிலம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இது சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இதில் சர்க்கரை மற்றும் காஃபின் ஆகியவையும் அதிகம் உள்ளன. அவை சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

பேக் செய்யப்பட்ட பழ சாறுகள்

இது தவிர, பேக் செய்யப்பட்ட பழ சாறுகளில் இயற்கை சாறுகளை விட அதிக ப்ரிசர்வேடிவ்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இவை நீரிழிவு அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சிறுநீரக ஆரோக்கியத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த பானங்கள் உடலில் நச்சுக்களை அதிகரிக்கின்றன. ஆகையால், இவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மதுபானம்

மதுபானம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவு  தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இது சிறுநீரகங்களுக்கு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. மதுபானத்தை உட்கொள்வது உடலில் நீர்ச்சத்து இழப்பை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை சமநிலையற்றதாக மாற்றுகிறது. நீண்ட காலத்திற்கு தொடர்ந்து மது அருந்துவது சிறுநீரக செயல்பாட்டை நிரந்தரமாக சேதப்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆற்றல் பானங்கள்

எனர்ஜி பானங்களில் உள்ள அதிக காஃபின் மற்றும் சர்க்கரை சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இவை உடல் சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கின்றன. இதன் காரணமாக உடல் தண்ணீரை அதிக அளவில் இழக்கிறது. இது சிறுநீரகங்களைப் பாதிக்கிறது.

விளையாட்டு பானங்கள்

இது தவிர, ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் எனப்படும் விளையாட்டு பானங்கள் ஆரோக்கியமானவையாகக் கருதப்பட்டாலும், அவற்றில் அதிக சோடியம் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளன. ஆகையால், இதை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீரகங்களில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேலும் இது உடல் ஆரோக்கியத்தையும் மோசமாக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 7 மாதங்களில் 40 கிலோ எடை குறைந்தது எப்படி? சீக்ரட் பகிரும் பெண்!

மேலும் படிக்க | சிறுநீரில் அதிக நுரை, மஞ்சள் கலர் தென்படுகிறதா? உஷார் மக்களே - இதுதான் காரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News