Weight Loss Tips: உடல் எடை குறைப்பு என்பது எளிதான ஒன்றில்லை. ஆனாலும் நீங்கள் சில எளிமையான விஷயங்களை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தாலே நீங்கள் நினைக்கும் உடல் எடைக்கு வந்துவிடலாம்.
Weight Loss Tips: வினோத் சன்னா கூறும் அட்வைஸ்
அதாவது உங்களின் உணவுப் பழக்கவழக்கத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவது, தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் ஆகியவை உடல் எடை குறைப்புக்கு உதவும் தான். இருந்தாலும் இது அனைவருக்கும் கைக்கொடுக்குமா என்பது சொல்ல இயலாது. இதை தொடர்ச்சியாக செய்தாலும் கூட சிலருக்கு உடல் எடை என்பது பெரிதும் குறையாது.
இதுகுறித்து ஆனந்த் அம்பானியின் உடல் எடை குறைப்பு பயிற்சியாளர் வினோத் சன்னா கூறுகையில்,"ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சியை பின்பற்றிய பிறகும், எடையை குறைக்க முடியவில்லை அல்லது தங்கள் இலக்கை அடையவில்லை என்று பலரும் பொதுவாக புகார் கூறுவார்கள்.
இது ஊக்கம் இழந்து மனச்சோர்வுக்கு ஆளாவதே முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதுபோன்ற நேரங்களில், உடற்பயிற்சி துறையில் 22 வருட அனுபவத்தின்படி, பெரும்பாலான மக்கள் உடல் வகையைப் புரிந்து கொள்ளாமல், மற்றவர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதை நான் கவனித்திருக்கிறேன்" என்கிறார்.
Weight Loss Tips: ஆனந்த் அம்பானி 108 கிலோ உடல் எடை குறைப்பு
முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி 108 கிலோ உடல் எடையை குறைக்க வினோத் சன்னா உடற்தகுதி நிபுணராக செயல்பட்டுள்ளார். இவர் தான் நிதா அம்பானியின் உடற்தகுதி பயிற்சியாளராகவும் உள்ளார். நிதா அம்பானியின் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்து சுமார் 18 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார். அந்த வகையில், உடல் எடையை குறைக்க இந்த 4 விஷயங்களை முக்கிம் என்கிறார். இதனை பின்பற்றுதல் மூலம் தவறுகளை தவிர்க்கலாம் என்றும் அவர் கூறுகிறார். அந்த 4 விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
Weight Loss Tips: வினோத் சன்னா கூறும் அந்த 4 விஷயங்கள்
- முதலில் மற்றவர்கள் செய்வதை பின்பற்றாதீர்கள். உங்களின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்து செயல்படுங்கள். மற்றவர்களின் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும் என்றில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையும், உடலும் வெவ்வேறானது.
- அப்படியென்றால் உங்களின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள நல்ல பயிற்சியாளரை சென்று ஆலோசனை செய்யுங்கள். ஆம், அதற்கு கொஞ்சம் செலவாகும்தான். ஆனால், நீண்ட கால நோக்கில் பார்த்தால் உடல் எடையை குறைக்க நீங்கள் உடற்தகுதி பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அவர்கள் உடல் எடை குறைப்பில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். உங்கள் உடலை முழுவதுமாக சோதனை செய்து உடல் எடையை குறைக்க அவர்கள் தகுந்த வழியை அமைத்துக் கொடுப்பார்கள்.
- உணவுமுறையில் கட்டுப்பாட்டுடன் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் ஆசைக்கு அப்பப்போ இனிப்புகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், நொறுக்குத் தீனிகளை சிலர் உட்கொள்வார்கள். அதாவது 4-5 நாள்கள் கட்டுப்பாட்டுடன் இருந்துவிட்டு 1 நாள் மட்டும் பிடித்ததை சாப்பிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த ஒரு நாள் உங்களின் ஒட்டுமொத்த கடின உழைப்பையும் பாழாக்கிவிடும். நீங்கள் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருந்தால் குறைந்தது 15 நாள்களுக்கு ஒருமுறை வேண்டுமானாலும் அதுபோன்ற உணவுகளை நீங்கள் உண்ணலாம். நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதில் கவனமாக இருங்கள்.
- அதேபோல் நீங்களே உங்களுக்கு சவால் அளித்துக்கொள்ளுங்கள். சொகுசாக இருந்து உடல் எடையை குறைக்க இயலாது. எனவே, உங்களின் சொகுசு வாழ்வில் இருந்து வெளியே வந்து உங்களுக்கு நீங்களே ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி பாய்ந்து ஓடுங்கள். தொடர்ச்சியான கடின உழைப்பே உடல் எடையை குறைக்க உதவும். நீங்கள் சாதாரணமாக இதனை பின்பற்றினால் காயமடைவதற்கான வாயுப்பும் அதிகம்.
அம்பானி குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஷில்பா ஷெட்டி, ஜான் ஆப்ரகிஹாம் உள்ளிட்டோருக்கும் வினோத் சன்னாவே உடற்தகுதி பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
மேலும் படிக்க | 75 கிலோவை குறைத்த நபர்... காலை, மதியம், இரவு அவர் சாப்பிட்டவை தெரியுமா?
மேலும் படிக்க | Weight Loss: 72 கிலோவை அசால்ட்டாக குறைத்த பெண்... அவர் செய்தது என்ன?
மேலும் படிக்க | ஜிம்மிற்கு போகாமல் 3 மாதத்தில் 19 கிலோ எடை குறைப்பு.. சாத்தியமானது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









