கல்லீரல் கொழுப்பை கரைக்கும் மூன்று பழச்சாறுகள்...! முழு விவரம் இங்கே

Fatty liver : கல்லீரல் கொழுப்பு உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால் அதனை கரைக்கும் மூன்று காய்கறி சாறுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 6, 2025, 06:50 AM IST
  • கொழுப்பு கல்லீரல் முக்கிய அறிகுறிகள்
  • உடல் சோர்வு முதல் பலவீனம் வரை
  • கை, கால் வீக்கம், மஞ்சள் காமாலை அறிகுறிகள்
கல்லீரல் கொழுப்பை கரைக்கும் மூன்று பழச்சாறுகள்...! முழு விவரம் இங்கே

Fatty liver symptoms Tamil : கல்லீரல் (Fatty Liver) என்பது ஈரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து, அதன் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு நிலை. இது பெரும்பாலும் உடல் எடை அதிகமுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் அல்லது உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம்.

Add Zee News as a Preferred Source

கல்லீரல் கொழுப்புக்கு காய்கறி ஜூஸ்களின் பலன்கள்

ஆசியன் மருத்துவமனையின் டைரக்டர் மற்றும் காஸ்ட்ரோஎன்டராலஜி துறைத் தலைவர் டாக்டர் அமித் மிக்லானி கூறுகையில், பாலக்கீரை, கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளின் சாறு கொழுப்பான ஈரலை குணப்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார்.

1. பாலக்கீரை ஜூஸ் - பாலக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் C மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது ஈரலில் சேரும் விஷப்பொருட்களை வெளியேற்றி, ஈரலை சுத்தப்படுத்த உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்தி, ஈரலின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

2. கேரட் ஜூஸ் - கேரட்டில் உள்ள பீட்டா-கேரோடின் மற்றும் வைட்டமின் A ஈரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஈரலில் இருந்து விஷப்பொருட்களை வெளியேற்றி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உடலின் இயற்கையான தூய்மை செயல்முறைக்கு உதவுகிறது.

3. பீட்ரூட் ஜூஸ் - பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஈரலின் செயல்திறனை அதிகரித்து, இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. கல்லீரல் அழற்சி மற்றும் கொழுப்பு குறைக்க உதவுகிறது.

கொழுப்பு கல்லீரல் முக்கிய அறிகுறிகள்

வயிற்று வலி அல்லது வயிற்றுப் பகுதியில் அசௌகரியம், குறிப்பாக வலது பக்க மேல் பகுதியில், வயிறு உப்புசம் அல்லது அதிக சோர்வு, காரணம் இல்லாமல் உடல் எடை குறைதல், பசியின்மை. குமட்டல் அல்லது வாந்தி, மஞ்சள் காமாலை,  கல்லீரல் வீக்கம், கை-கால்களில் வீக்கம். மனக் குழப்பம் அல்லது ஒட்டுமொத்த உடல் பலவீனம்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், உடல் எடை விரைவாக குறைந்தால், மஞ்சள் காமாலை அறிகுறிகள் தெரிந்தால் கட்டாயம் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். 

தடுப்பு மற்றும் சிகிச்சை:

- உடல் எடையை கட்டுப்படுத்தவும்.
- சீரான உணவு முறை (கொழுப்பு, சர்க்கரை குறைந்த உணவுகள்).
- தினசரி உடற்பயிற்சி செய்யவும்.
- மது மற்றும் புகையிலை தவிர்க்கவும்.
- காய்கறி சாறுகள் (பீட்ரூட், கேரட், பாலக்கீரை) பயன்படுத்தவும்

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 4 மாதங்களில் 25 கிலோ குறைத்தது எப்படி? ஃபிட்னஸ் கோச் பகிரும் சீக்ரட்!

மேலும் படிக்க | 5-4-5 Walkimg Formula: வேகமா எடை குறைய இப்படி நடந்து பாருங்க, ஒல்லி பெல்லி கேரண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News