முகத்தில் எண்ணெய் வழிந்து கொட்டுகிறதா? அதை ‘இப்படி’ சரி செய்து கொள்ளலாம்..
Oily Skin Remedies: பலருக்கு அவர்களின் தோல் எண்ணெய் பசையுடன் இருப்பதாக இருக்கும். இது போன்ற சருமத்தை பராமரிப்பது எப்படி? இங்கு பார்ப்போம்.
Oily Skin Remedies Tips In Tamil : உலகில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்புகள் உள்ளன. ஒரு சிலருக்கு உலர்ந்து போகும், வறண்ட சருமம் இருக்கும். ஒரு சிலருக்கு தலையில் இருக்கும் எண்ணெயை விட முகத்தில் எண்ணெய் அதிகமாக இருக்கும். சிலருக்கு, எந்த சோப் உபயோகித்தாலும் ஒவ்வாத தன்மை கொண்ட உணர்திறன் கொண்ட சருமம் இருக்கும் . ஒரு சிலருக்கு அவரவர் வயதுக்கேற்ப சரும மாறுபாடுகளும் ஏற்படும். இதில், எண்ணெய் பசை உள்ளது போன்ற சருமம் கொண்டவர்கள் தங்களது சருமத்தை எப்படி பாதுகாப்பது என தெரியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கான டிப்ஸ், இதோ!
முகத்தில் ஏன் எண்ணெய் வழிகிறது?
சருமத்தில் எண்ணெய் வடிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மன அழுத்தம், ஈரப்பதமான நிலை, ஹார்மோன் மாறுபாடுகள், மரபியல் பிரச்சனைகள் போன்றவை முகத்தில் எண்ணெய் வடிவதற்கு காரணிகளாக அமைகின்றன. சருமத்தில் முழுமையாக எண்ணெய் வடியாமல் செய்ய விட முடியாது என்றாலும், இதை கட்டுப்படுத்துவதற்கென்று சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்:
ஆய்லி ஸ்கின் எனப்படும் முகத்தில் எண்ணெய் வழியும் தன்மை கொண்டவர்கள் முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் முகத்தில் வழியும் எண்ணெயை கட்டுப்படுத்த இதுவே முதன்மையான வழி என கூறப்பட்டுள்ளது. நமது முகத்தில் சின்ன சின்னதாக ஓட்டைகள் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் Skin Pores என்று கூறுவர். சருமத்தில் எண்ணெய் வடிபவர்கள் முகம் கழுவாமல் விட்டால், அந்த ஓட்டைகளில் புகும் எண்ணெய் பசை பின்னர் முகப்பருவாக கூட மாறலாம். இதனால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை முகத்தை சுத்தம் செய்வது கட்டாயமாகும்.
ஸ்க்ரப்பிங்:
முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனைகள் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை ஸ்க்ரப்பிங் முறையை கொண்டு முகத்தை சுத்தம் செய்வது நல்லது. இது, தோல் மருத்துவர்கள் குறிப்பிடும் வழிமுறைகளுள் ஒன்றாகும். முகத்தில் அதிகப்படியான எண்ணெய் வடிவதால் அது சருமத்தின் மேற்பரப்பில் இருக்கும் இறந்த செல்களை உருவாக்க வழி வகுக்கிறது. இதனால், முகத்தில் பரு, கரும்புள்ளிகள் ஆகியவை ஏற்படலாம்.
ஸ்க்ரப்பிங் செய்வதால் சருமத்தில் தேங்கியிருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்க உதவும். முகத்தில் ஏற்கனவே முகப்பருக்கள் இருந்தால் அந்த இடத்தில் ஸ்க்ரப் செய்வதை தவிர்க்கவும். இதை செய்கையில், முகம் கழுவுவது போல வேகமாக செய்யக்கூடாது. மெதுவாக கடிகார சுற்று வகையில் முகத்தில் தேய்க்க வேண்டும்.
ஃபேஸ் பேக்:
முகத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக் போடுவது, எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு மட்டுமன்றி அனைத்து சரும பெண்களுக்குமே நல்லது. களிமண் ஃபேஸ்பேக், சந்தனம், முல்தானி மிட்டி உள்ளிட்ட பொருட்கள் முகத்தில் இருக்கும் எண்ணெயை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளன. இவை மட்டுமன்றி இன்னும் சில இயற்கையான ஃபேஸ் பேக்களும் உள்ளன.
ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அதை மசித்து அதில் 2 தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தவலாம். இதனை 20 நிமிடங்கள் கழித்து மிதமான சூடு உள்ள தண்ணீரில் முகத்தை கழுவலாம்.
மேலும் படிக்க | இரவில் தூக்கமே வருவதில்லையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்..
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ