எச்சரிக்கை... ஆஸ்துமா - சுவாச பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாத... சில உணவுகள்

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், சுற்று சூழல் மாசுபாடு, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால், நுரையீரலை பாதிக்கும் நோய்களான, ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 6, 2025, 11:21 AM IST
  • சுவாசம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • ஆஸ்துமா நோயாளிகளுக்கான உணவு முறை.
  • 2050ஆம் ஆண்டு வாக்கில், ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும்.
எச்சரிக்கை... ஆஸ்துமா - சுவாச பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாத... சில உணவுகள்

இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், சுற்று சூழல் மாசுபாடு, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால், நுரையீரலை பாதிக்கும் நோய்களான, ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம், தொடர் இருமல், சளி, ஜலதோஷம், மூச்சிரைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் 2050ஆம் ஆண்டு வாக்கில், ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.

சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கவும் செய்ய வேண்டியவை

ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை, ஆஸ்துமா தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கான, டயட் மற்றும் வாழ்க்கை முறை குறித்த ஆலோசனைகளும், ஆஸ்துமா ஆஸ்துமா மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கவும் செய்ய வேண்டியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் நுரையீரல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், தவிர்க்க வேண்டிய சில உணவுகள் (Health Tips) குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கான உணவு முறை

ஆஸ்துமா நோயாளிகள் உணவின் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் தவறான உணவுகள் நோயைத் தீவிரமாக்கும். சில உணவுகள் ஒவ்வாமையை தூண்டி, வீக்கத்தை அதிகரித்து, சுவாசப் பாதைகளை சுருக்கலாம். எனவே உணவு விஷயத்தில் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. நுரையீரலை பலவீனப்படுத்தும் கீழ்கண்ட உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு நோ சொல்வது நல்லது. அதிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் ஆஸ்துமாவை தூண்டக்கூடிய, சல்பைடுகள் உள்ளன. இதில் அதிக அளவில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்க, இதில் சேர்க்கப்படும் ரசாயனங்களும் நுரையீரலை பலவீனப்படுத்த கூடியவை.

ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள்

குளிர்ச்சியான உணவுகள், நுரையீரலை பாதிக்கக் கூடியவை. இவை சுவாசக் குழாய்களை சுருங்கச் செய்து, சுவாச பிரச்சனைகளை தீவிரமடைய செய்கிறது. சேர்க்கப்படும் அதிக அளவிலான சர்க்கரை உடலுக்கு பல வகைகளில் கேடு விளைவிக்க கூடியவை.

பால் பொருட்கள்

பால் பொருட்கள் அனைத்தும் ஆரோக்கிய நன்மைகள் கொண்டவை என்றாலும், இவை நுரையீரல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏற்றது அல்ல. எனினும் பால், பாலாடை கட்டி, வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள், சளி பிரச்சனையை தீவிரப்படுத்தி, சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

காபி

காபியில் உள்ள காபின், அமில அனிச்சையை அதிகரிப்பதால், நுரையீரல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் காபி அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டும். இது அவர்களது நூல் எதிர்ப்பு சக்தியை பலவீனமடைய செய்யும்.

மதுபானம்

ஆஸ்துமா நோயாளிகள் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று மதுவும் நுரையீரலுக்கு நல்லதல்ல. மதுபானங்களில் மற்றும் பீர் வகைகளில் கலக்கப்படும் சல்பைடுகள், ஆஸ்துமா நோயாளிகளின் பிரச்சினையை அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மூட்டு வலி முதல் கொலஸ்ட்ரால் வரை.... நோயற்ற வாழ்வுக்கு உதவும் ஓமம்

மேலும் படிக்க | எச்சரிக்கை... மூளையை சல்லடையாய் துளைக்கும்... சில ஆபத்தான உணவுகள் - பழக்கங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News