Weight Loss Home Remedies: உடல் பருமன் உலக மக்களை பாடாய் படுத்தும் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடல் செயல்பாடற்ற நிலை ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று என்பதை நாம் மறுக்க முடியாது. குறிப்பாக தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் இடுப்பு கொழுப்பு அதிகமாகிவிட்டால், அவற்றை கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. இது நமது ஆளுமையில் பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பல வித நோய்களுக்கும் வழிவகுக்கிறது.
உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், இந்த முயற்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பலனளிப்பதில்லை. சிலருக்கு சில முயற்சிகளால் பக்க விளைவுகளும் ஏற்படலாம். எப்போதுமே இயற்கையான வழிகளில் தீர்வுகளை காண முயற்சிப்பது நல்லது. சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க முடியும். அப்படிப்பட்ட சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் சில இயற்கையான பானங்கள் பற்றி இங்கே பார்கலாம். இவற்றை தினமும் காலையில் குடிப்பதால் எடை இழப்பு ஏற்படுவதோடு, இன்னும் பல வித நன்மைகளும் ஏற்படும்.
எலுமிச்சை நீர்
நாளின் தொடக்கம் ஆரோக்கியமாக இருந்தால், அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகையால், எப்போதும் நாளின் தொடக்கத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நல்லது. எடையை இழக்க நினைப்பவர்கள், வெறும் வயிற்றில் தினமும் எலுமிச்சை நீர் குடிக்கலாம். இது வேகமாக கலோரிகளை எரித்து எடையை குறைக்க உதவுகிறது.
மஞ்சள் நீர்
மஞ்சள் சமையலறையில் நாம் பல வித உணவுகளில் பயன்படுத்தும் ஒரு மசாலா ஆகும். இது பல வகையான உணவுகளின் சுவை மற்றும் நிறத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது. இதில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மஞ்சளில் உள்ள குர்குமின், உடல் கொழுப்பைக் குறைப்பதற்கும் எடையைக் குறைப்பதற்கும் உதவியாக இருக்கும். உடல் பருமனைக் குறைக்க, காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் நீரை உட்கொள்ளலாம். இது கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது.
இஞ்சி நீர்
இஞ்சி பல வித மருத்துவ குணங்கள் நிறைந்தது. தினமும் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடிப்பது எடையைக் குறைக்க உதவும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வாயுத்தொல்லை, அஜீரணம் போன்றவற்றுக்கும் இது நிவாரணம் அளிக்கும்.
இலவங்கப்பட்டை நீர்
இலவங்கப்பட்டை பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உடல் எடையை குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை பொடி நீரை உட்கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். இதுமட்டுமின்றி, இலவங்கப்பட்டை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... இலவங்கபட்டை பால் என்னும் அற்புத பானம்
மேலும் படிக்க | தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? ஆச்சரிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









