உடலில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி, பல நோய்களுக்கு வழிவகுக்கும். உடலில் வீக்கம் அளவிற்கு அதிகமானால், பல உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும், ஏற்கனவே உள்ள பிரச்சனைகளையும் தீவிரமாக்கும் என்றும் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மாதங்கள் மற்றும் வருடக்கணக்கில் நீடிக்கும் வீக்கம் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது படிப்படியாக ஆரோக்கியமான செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை கூட சேதப்படுத்துகிறது. இது நீரிழிவு, இதய நோய், கொழுப்பு கல்லீரல் மற்றும் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். எனினும் இது குறித்து பீதி அடைய தேவியயில்லை. ஏனெனில், அழற்சி எதிர்ப்பு உணவுகளின் உதவியுடன் உடல் வீக்கத்தை திறம்பட குறைக்கலாம்.
அழற்சி எதிர்ப்பு உணவுகள் பொதுவாக ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ஊட்டச்சத்து நிறைந்த முழு உணவுகளாகும். உடல் வீக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அழற்சி எதிர்ப்பு உணவுகளும் எடை இழப்புக்கு உதவும். உடல் வீக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், எடை இழப்பிலும் உதவும் சிறந்த உணவுகளை இந்த பதிவின் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அழற்சி எதிர்ப்பு உணவுகள் எடை இழப்புக்கு எவ்வாறு உதவுகின்றன?
முதலில், அழற்சி எதிர்ப்பு உணவுகளை உங்கள் எடை இழப்பு உணவில் ஏன் சேர்க்க வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். உடலில் ஏற்படும் வீக்கம் உங்களை எடை அதிகரிக்கச் செய்யலாம். இதன் விளைவாக, உங்கள் எடை இழப்பு உணவு மற்றும் உடற்பயிற்சி நடைமுறைகள் பயனற்றதாகிவிடும். பருமனை குறைக்க உடல் வீக்கத்தைக் குறைப்பது எடை இழப்புக்கான உணவு மற்றும் உடற்பயிற்சியைப் போலவே முக்கியமானது என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது.
அழற்சி எதிர்ப்பு உணவுகள் பொதுவாக ஊட்டச்சத்து நிறைந்தவை, குறைவான கலோரிகளைக் கொண்டவை. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற பெரும்பாலான அழற்சி எதிர்ப்பு உணவுகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை பசியைக் குறைக்க உதவுகின்றன.
நாள்பட்ட வீக்கம் பெரும்பாலும் உடல் பருமன் உள்ளிட்ட வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் தொடர்புடைய பிரச்சனை. அழற்சி எதிர்ப்பு உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், உடலில் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தலாம்.
எடை இழப்புக்கு உதவும் சிறந்த அழற்சி எதிர்ப்பு உணவுகள்
1. மஞ்சள், இலவங்கப்பட்டை மற்றும் வெந்தயம் போன்ற
2. மசாலாப் பொருட்கள்
3. ப்ரோக்கோலி
4. குடை மிளகாய்
5. வாதுமை பருப்பு
6. பாதாம் பருப்பு
7. வெண்ணெய்
8.எக்ஸ்ட்ரா வெரிஜின் ஆலிவ் எண்ணெய்
9. க்ரீன் டீ
10. பெர்ரி பழங்கள்.
உடல் வீக்கத்தை ஏற்படுத்தும் சில உணவுகள்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், டிரான்ஸ் கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் சர்க்கரை பானங்கள் ஆகியவை உடல் வீக்கத்தை ஏற்படுத்தும் சில உணவுகளில் அடங்கும். இவற்றை தவிர்ப்பது அவசியம்
அழற்சி எதிர்ப்பு உணவின் பிற நன்மைகள்
1. மூட்டுவலி மற்றும் தன்னுடல் தாக்க நோய்களின் அறிகுறிகளை மேம்படுத்த உதவும்
2. உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்
3. இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
4. ஆற்றல் அளவு குறையாமல் இருக்கும்.
5. அழற்சி எதிர்ப்பு உணவுகள் நிறைந்த உணவு உங்கள் எடையைக் குறைக்க உதவுவதோடு மட்டுகின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | டூத் பேஸ்டுடன் கறித்தூளை சேர்த்து பல் துலக்குவது ஆரோக்கியமானதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ