பல ஆண்டு காலங்களாக மூலிகைகள் நோய்களை டீர்க்கும் அருமருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூலிகைகள் மிக கடுமையான நோய்களையும் குணப்படுத்தும் திறன் கொண்டது. மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடலின் உள் உறுப்புக்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. அதில் குறிப்பிட்ட சில மூலிகைகள் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை அதிகரிக்கிறது.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், நீரிழிவு, அதிக கொழுப்பு மற்றும் தைராய்டு போன்ற நோய்களின் ஆபத்தும் அதிகரித்து வருகிறது. உடலில் நச்சுகள் சேரத் தொடங்குகின்றன. இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால், யூரிக் அமிலப் பிரச்சினை ஆகியவை அதிகரித்துள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுமுறை உடலில் உள்ள நச்சுக்களின் அளவை படிப்படியாக அதிகரிக்கிறது. இதற்கு, சிறுநீரகங்கள் இரத்தத்தை சரியாக வடிகட்டி, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவது அவசியம். சிறுநீரக வடிகட்டியை மேம்படுத்த பாபா ராம்தேவ் சிறப்பு மூலிகைகளை பரிந்துரைத்துள்ளார்.
ஆயுர்வேதத்தில் உள்ள சில குறிப்பிட்ட மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம், உடலில் குவிந்துள்ள நச்சுகள் அகற்றப்பட்டு, சிறுநீரகங்களின் வடிகட்டுதல் திறன் மேம்படுகிறது. இந்த மூலிகைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தலாம். இந்த மூலிகைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிப்பதை இயற்கையாகவே குறைக்கலாம்.
சிறுநீரக வடிகட்டும் திறனை மேம்படுத்தும் மூலிகைகள்
நெருஞ்சி
ஆயுர்வேதத்தில் நெருஞ்சி மிகவும் பயனுள்ள ஒரு மூலிகையாகக் கருதப்படுகிறது. நெருஞ்சி உடலின் வாத தோஷம் மற்றும் பித்த தோஷத்தை சீராக வைத்திருக்கிறது. நெருஞ்சி மூலிகையை பயன்படுத்துவதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். நெருஞ்சி சிறுநீரகங்களின் வடிகட்டுதல் திறனை அதிகரிக்கிறது. நெருஞ்சி கஷாயத்தில் ஆக்சலேட், பாஸ்பேட் மற்றும் கால்சியம் ஆகியவற்றைக் குறைக்கும் கூறுகள் உள்ளன. இது இரத்த யூரியா நைட்ரஜன், யூரிக் அமிலம் மற்றும் கிரியேட்டினின் ஆகியவற்றையும் குறைக்கும்.
மூக்கிரட்டை
சிறுநீரகங்களின் வடிகட்டுதல் திறனை அதிகரிக்க மூக்கிரட்டை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதன் மூலம், உடலில் அதிகரித்து வரும் யூரிக் அமிலத்தையும் குறைக்கலாம். மூக்கிரட்டையை உட்கொள்வதன் மூலம், யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. இது மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் சிறப்பு அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
சந்திரபிரபா வடி
ஆயுர்வேதத்தில் சந்திரபிரபா வடி ஒரு பயனுள்ள மூலிகையாக கருதப்படுகிறது. இது யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த மூலிகையைப் பயன்படுத்துவதன் மூலம் யூரியா மற்றும் கிரியேட்டினின் போன்ற நச்சுக்களைக் குறைக்கலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை உட்கொள்வதால் வயிற்றுப் பிரச்சனைகள் குறையும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | மெட்டபாலிசத்தை தூண்டி... அதிக கலோரிகளை எரிக்கும்... சில சிறந்த வெயிட் லாஸ் பானங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ'









