நோயற்ற வாழ்வுக்கு... சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் சோம்பு கட்டாயம் சாப்பிடுங்க... சில முக்கிய காரணங்கள்

பெருஞ்சீரகத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் நொதிகள் உள்ள நிலையில், உணவு விரைவாகவும் எளிதாகவும் செரிக்கப்படுகிறது. செரிமானம் சிறப்பாக இருந்தால், உடல் பருமன் முதல் இதய நோய் வரை பல பிரச்சனைகளை தவிர்த்து விடலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 26, 2025, 12:21 PM IST
  • பெருஞ்சீரகத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் நொதிகள் உள்ளன.
  • பெருஞ்சீரகம் பற்றி ஆயுர்வேதம் கூறுவது என்ன?
  • அஜீரண பிரச்சனைகளில் இருந்து முழுமையாக தப்பிக்க உதவும் சோம்பு.
நோயற்ற வாழ்வுக்கு... சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் சோம்பு கட்டாயம் சாப்பிடுங்க... சில முக்கிய காரணங்கள்

தென்னிந்திய சமையலில் பெருஞ்சீரகம் அல்லது சோம்பு, ஒரு மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பலர் இரவு உணவிற்குப் பிறகு புத்துணர்ச்சியை உணரவும், மவுத் ப்ரெஷ்னராகவும் பெருஞ்சீரக விதைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ள நிலையில், இதனை முறையாக பயன்படுத்தினால், செரிமன அமைப்பு வலுவாக ஆவதோடு அஜீரண பிரச்சனைகளில் இருந்து முழுமையாக தப்பிக்கலாம்.

Add Zee News as a Preferred Source

உடல் பருமன் முதல் இதய நோய் வரை பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்

பெருஞ்சீரகத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் நொதிகள் உள்ள நிலையில், உணவு விரைவாகவும் எளிதாகவும் செரிக்கப்படுகிறது. செரிமானம் சிறப்பாக இருந்தால், உடல் பருமன் முதல் இதய நோய் வரை பல பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். எனவே, சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடலாம். பெருஞ்சீரகத்தில் உள்ள கூறுகள் உணவை விரைவாக ஜீரணிக்க மிகவும் உதவியாக இருக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல நோய்களுக்கான அருமருந்தாக கருதப்படும் பெருஞ்சீரகம்

ஆயுர்வேதத்தில், பெருஞ்சீரகம் பல நோய்களுக்கான அருமருந்தாக கருதப்படுகிறது. இது வயிறு தொடர்பான கோளாறுகளை நீக்குவதில் உதவியாக இருக்கும். பெருஞ்சீரக விதைகள் குளிர்ச்சியையும், வயிற்றுக்கு இதத்தையும் அளிக்கும். பித்தக் கோளாறை சமநிலைப்படுத்துவதில் உதவியாக இருக்கும். இதன் மூலம், வாயு, அஜீரணம் மற்றும் வயிற்றில் காணப்பௌட்ம் எரிச்சல் உணர்வு என பல வகையான அஜீரண பிரச்சனையை பெருமளவில் குறைக்கலாம். 

செரிமான அமைப்பு வலுவடைய உதவும் சோம்பு

வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று எரிச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருஞ்சீரகம் அல்லது சோம்பு மிகவும் நன்மை பயக்கும். பெருஞ்சீரக விதைகளை தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் செரிமான அமைப்பு வலுவடைந்து, அஜீரண பிரச்சனைகள் தீர்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகத்தில் உள்ள பளபளப்பும் திரும்பும். 

பெருஞ்சீரகம் பற்றி ஆயுர்வேதம் கூறுவது என்ன?

"பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது அல்லது தேநீராக உட்கொள்வது செரிமான அமைப்பை பலப்படுத்துவதோடு மன அமைதியையும் அளிக்கிறது" என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. பெருஞ்சீரக விதைகளை மென்று சாப்பிடுவது வாயுத்தொல்லை மற்றும் கனத்தன்மையைக் குறைத்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. பெருஞ்சீரகத்தின் குளிர்ச்சியான தன்மை பித்தக் கோளாறை அமைதிப்படுத்துகிறது. வெந்தயம் நெஞ்செரிச்சல் மற்றும் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பெருஞ்சீரகம் என்ற சோம்பு

வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர, பெருஞ்சீரக விதைகளை சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது. சோம்பில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது துர்நாற்றத்தைக் குறைத்து ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதே நேரத்தில், இரவு உணவிற்குப் பிறகு பெருஞ்சீரகம் சாப்பிடுவது சுவாசத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். பெருஞ்சீரகம் தேநீர் குடிப்பது மாதவிடாய் அசௌகரியம் மற்றும் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. பெருஞ்சீரக விதைகளை தொடர்ந்து உட்கொள்வது பருவகால நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. பெருஞ்சீரகம் சாப்பிடுவது மன அழுத்தத்தை நீக்குவதோடு, நல்ல தூக்கத்தையும் பெற உதவுகிறது.

பெருஞ்சீரகம் அல்லது சோம்பை யாரெல்லாம் உட்கொள்ளக்கூடாது..?

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால், கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக இதனஒ உட்கொள்ளக்கூடாது. சில நேரங்களில் இது சிலருக்கு ஒவ்வாமை அல்லது ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அதே போல, நீங்கள் ஏதாவது மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால், பெருஞ்சீரகம் சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | இளம் வயதில் முதுகுவலி வருவதற்கான காரணம் என்ன? தீர்வாகும் உணவு எது?

மேலும் படிக்க | அமைதியான அரக்கன் Low BP!! இதுவும் மாரடைப்பை ஏற்படுத்தும் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News