அடாவடி கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் காய்கள்: லிஸ்ட் இதோ

Cholesterol Control Tips: கெட்ட கொழுப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவில் சேர்க்க வேண்டிய 5 காய்கறிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 3, 2025, 05:01 PM IST
  • பூண்டு பற்களை மென்று சாப்பிடுவது கெட்ட கொழுப்பை குறைக்கும்.
  • காலையில் வெறும் வயிற்றில் பூண்டு பற்களை மென்று சாப்பிடலாம்.
  • இது ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
அடாவடி கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் காய்கள்: லிஸ்ட் இதோ

Vegatables for Cholesterol Control: இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மனிதர்களை அச்சுறுத்தும் நோய்களில் உயர் கொலஸ்ட்ராலும் முக்கியமான ஒன்றாகும். கெட்ட கொழுப்பு என்பது நரம்புகளில் ஒட்டிக்கொள்ளும் ஒரு ஒட்டும் பொருள். இது இரத்த ஓட்டத்தை மெதுவாக்குகிறது. 

அதிக கொழுப்பு இதய நோய், பக்கவாதம் மற்றும் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையால் கெட்ட கொழுப்பு பிரச்சினைகள் ஏற்படலாம். பல எளிய, இயற்கையான வழிகளில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். அவற்றில் சில காய்களும் அடங்கும். கெட்ட கொழுப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவில் சேர்க்க வேண்டிய 5 காய்கறிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் காய்கறிகள்

Broccoli: ப்ரோக்கோலி

காய்கறிகளில் ப்ரோக்கோலி அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட காயாக கருதப்படுகின்றது. ப்ரோக்கோலி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ப்ரோக்கோலியில் உள்ள பண்புகள் இதய ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கின்றன. ப்ரோக்கோலியை வேகவைத்து, வதக்கி, அல்லது சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.

 

Spinach: கீரை

கீரை ஆரோக்கியத்திற்கும் நல்லது. கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. கீரை சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

Garlic: பூண்டு

பூண்டு பற்களை மென்று சாப்பிடுவது கெட்ட கொழுப்பை குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டு பற்களை மென்று சாப்பிடலாம். இது ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. 

Onion: வெங்காயம்

நமது சமையலில் வெங்காயம் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வெங்காயம் கொழுப்பை குறைக்க உதவும். வெங்காயத்தில் கொலஸ்ட்ரால் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. வெங்காய சாறு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்டி அடிக்கும் வல்லமை கொண்டது. சாலட், சாறு வடிவிலோ அல்லது பிற உணவு வகைகளில் சேர்த்தோ வெங்காயத்தை உட்கொள்வது நன்மை பயக்கும். 

Okra: வெண்டைக்காய்

வெண்டைக்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில்  ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளும் உள்ளன. வெண்டைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது.

Brinjal: கத்தரிக்காய்

அதிக கொழுப்பைக் குறைக்க கத்தரிக்காய் சாப்பிடலாம். கத்தரிக்காய் செரிமானத்திற்கும் நல்லது. இதில் இரும்புச்சத்தும் இன்னும் பல வித ஊட்டச்சத்துக்களும் உள்ளன. 

Carrot: கேரட்

கேரட்டில் உள்ள பல வித ஊட்டச்சத்துகள் கெட்ட கொல்ஸ்ட்ராலை குறைக்க உதவும். கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் தினமும் கேரட் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது கொழுப்பை நீக்குவதுடன் உடலில் உள்ள நச்சுகளையும் நீக்குகின்றது

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பின்புறம் பெரிதாக தொங்கும் சதை..குறைக்கும் 7 நிமிட உடற்பயிற்சிகள்!

மேலும் படிக்க | 20 கிலோவை 3 மாதங்களில் குறைத்த பெண்... இந்த 10 டிப்ஸ்களை பலோ பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News